(பொ-ரை) |
(1) கருநிற மேகங்கள் ஒன்று இரண்டு சுருண்டு சுழியெறிவது போல் காட்சியளிக்கின்ற
கூந்தல் முடியினாள்; காதுகள் வரை நீண்டு சென்று வியைாடி ஆடவர் நெஞ்சைக் கொள்ளைகொள்கின்ற
கெண்டை மீனையொத்த கண்களையுடையாள்; அழகுள்ள முள் முருக்கின் அரும்பை யொத்த
மேல் கீழ் இதழினையுடையாள்; அழகிய வில்லைப்போல் வளைந்து மூன்றாம் பிறைத்திங்களைப்
போல் ஒளிவிடுகின்ற நெற்றியையுடையாள்;
(2) அரம்பை யென்னும் மங்கையின் நாடாகிய விண்ணுலகத்தில் தோன்றும் வான
வில்லுங்கூட ஆசை மொழி பேசும்படி அமைந்த கண்களின் புருவத்தையுடையாள்; தன்னைப்
பார்க்கின்ற மற்ற ஆடவர் பெண்டிர்களின் அறிவையும் மயக்குகின்ற இறுமாப்புமிக்க
மங்கைப் பருவத்தை யுடையாள்; கரும்பின் சாறுபோல் இனிப்புக்கொண்டு அமிழ்தம்போல்
(மிக இனிக்கும்) தெளிவாக எடுத்த சொல்லை யுடையாள்; இரைச்சல் இடுகின்ற கடல்
அலைகளால் ஒதுக்கப்பட்ட முத்துகளைப் பதித்து வைத்தாலொத்த வரிசையான பற்களை
யுடையாள்;
(3) பற்களின் நிற அழகை எட்டிப்பார்ப்பது போல் மூக்கில் புல்லாக்காக இட்ட
ஒப்பில்லாத முத்தினை யுடையாள்; திங்களும் பழகத்தக்க ஒளிவடிவில் நிலைத்து
அழகு மாறாமல் இருக்கின்ற முகத்தினை யுடையாள்; ஒளிபொருந்திய பல்வகை அணிகளைப்
பூண்டு, கொடிகள் சுற்றுகின்ற கமுகினையும் வெற்றி கொண்ட கழுத்தினை யுடையாள்;
உலகம் எல்லாவற்றையும் தனக்கு விலைப்பொருளாக மதித்தெழுதச் செய்து, இன்பத்தை
நிலைநிறுத்தி எழுதுகின்ற சந்தனக் குழம்பால் எழுதப் பெற்ற எழுதுவரிக் கோலத்தை
யுடையாள்;
(4) மணிகள் அழுத்திப் பொன்னாற் செய்த அழகிய வளையல்களை அணிந்துள்ள சிவந்த
கைகளையுடைய தன்னிடம் முழுதும் இரவிக்கையால் மூடப்பட்டிருப்பினும் இனிமை தங்கியிருக்கின்ற
இரண்டு கொங்கைகளை யுடையாள்; இறைவன் அன்பில் கூடும் எண்ணமுடையவராகிய முனிவர்களின்
மனமாகிய கல்லையுங்கூட (கரைந்துருகும்படி) மாற்றுகின்ற அழகுள்ள கொப்பூழையுடையாள்;
மேலிடத்தில் நேராகக் கொண்டு ஆடவர் மனத்தைக் தன்பால் அடக்குகின்ற (வயிற்று)
மயிரொழுங்கினை யுடையாள்
(5) உடுக்கைக்கும் உள்ளிடம் சிறுத்து ஒருகைப்பிடியளவுக்குள் அடங்குகின்ற சிறிய
இடையையுடையாள்; காமனாகிய கொடியவனது அரண்மனைக்குக் கட்டிவைத்துள்ள வாழைமரத்தைப்
போன்ற தொடைகளை யுடையாள்; மடிப்பையுடைய அழகிய ஆடைகளை விரித்துக் கொய்து
உடுத்த உடையினையுடையாள்; இள அன்னத்தின் நடையைப்பார்க்கினும் மெல்ல நடக்கின்ற
நடையை யுடையாள்;
(6) பெரு முழக்கமுடைய கடலிற் பிறந்த தேவாமிர்தத்தைக் கொண்டு உருவாக்கியதைப்
போன்ற இன்பஞ் செய்யும் திருவடிவுடையாள்; வீமனாற் செய்யப்படும் உணவு போல்
சுவை கொண்ட காதல் ஆசையாகிய பாலுக்கு மேலும் இனிமை கொடுக்கும் சருக்கரையைப்
போன்றவள்; பொருந்திய நல்ல மணமுள்ள வல்லிக்கொடியைப் போன்ற வசந்தவல்லியினது
இவ் வழகு மிகுதி, அறுபத்து நான்கு சக்தி பீடத்தில் ஒன்றாக இலகும் இத் திருக்குற்றாலத்தில்
எழுந்தருளியிருப்பவரான திரிகூடராசப் பெருமானது திருவுள்ளத்தையும் உருகும்படி செய்யும்.
|
|
(வி-ரை) |
1-6 இக் கண்ணிகள் ஆறும் முடிமுதல் அடிவரை (கேசாதிபாதம்) வருணனையாக வசந்தவல்லி
கூந்தல், கண், இதழ், நுதல் போன்ற எல்லா வடிவையும் அழகுறக் காட்டி இவள் அழகால்
குற்றாலநார் உள்ளங்கூட உருகுமென்றால் வேறென்ன விளம்புவதென்று ஆசிரியர் கூறி
முடிக்கின்றார்.
குழை-காது, சிலை-வில் அரம்பைதேசம்-வானுலகம், கருவம்-செருக்கு; இறுமாப்பு கரும்பு
அதன் சாற்றுக்கு ஆகுபெயர். மருந்து-அமிழ்தம், திரை-அலை நிரை-வரிசை, எட்டிப்பார்த்தல்-தலைநீட்டிக்
காணுதல், புல்லாக்கு, பற்களுக்கு நேராகத் தொங்கியசைவதை எட்டிப் பார்ப்பது
போல் குறித்தார். அழகு குடிகொள்ளுதல்-அழகு கெடாமல் என்றும்ஒரேபடியாக நிலைத்திருத்தல்.
வல்லி-கொடி, கழுத்தி்ல் பல்வகைச் சங்கிலிகள் பூண்டிருப்பது கமுகில் கொடி
படர்ந்திருப்பதுபோல் தோன்றுவதென்றபடி, சகம்-உலகம், இன்பநிலை இடுதல்-இன்பத்தை
நிலைத்திருக்கச் செய்தல், தொய்யில்-மார்பினும் தோளினும் கலவைச் சந்தனத்தால்
எழுதுகின்ற வரிக்கோலம், செல்லம்-செல்வம், சிறப்பு, கச்சு-இரவிக்கை, ஒல்லுதல்-பொருந்துதல்,
கருத்தர்-கருத்தினையுடையார், கருத்து-எண்ணம், கல்-கல்போன்ற வலிமை, உரோமபந்தி-மயிரொழுங்கு,
அடுக்கு-மடுப்பு, சின்ன-சிறிய; ஈண்டுமெல்லிய, வெடித்தல்-பெரு முழக்கம் வீமபாகம்-வீமனால்
செய்த உணவுவகை, மிகச் சிறந்த முறையில் வீமன் சமைப்பான் என்பது பாரதக்கதை,
காமமாகிய பால்-காம இன்பத்தின் வகைகள், பிடித்த பொருந்திய; சேர்ந்த,
பெருக்கம் ஈண்டு (அழகு) மிகுதி, சத்திபீடம்- சத்திவீற்றிருக்கும் உயிரடம்
கச்சுக்கிடக்கினும் என்பதில் கச்சு-கைத்து; கசப்புடையதாகி என்றும் கச்சு,
இரவிக்கையென்றும் இரு பொருள் நயம் காண்க. |
(18) |
வசந்தவல்லி பந்தடித்தல்
விருத்தம்
வித்தகர்
திரிகூடத்தில் வெளிவந்த வசந்த வல்லி
தத்துறு விளையாட் டாலோ தடமுலைப் பணைப்பி னாலோ
நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப்
பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே,
|
(பொ-ரை) |
(
மெய்யறிவினரான திருக்குற்றால நாதரின் திரிகூட மலையையுடைய நகரத்தில் வெளித்தோன்றிய
வசந்தவல்லியானவள் தாவுகின்ற விளையாட்டினாலோ; அன்றிப் பெரிய கொங்கைகளின்
சுமையினாலோ, சங்கு வளையல்கள் அணிந்துள்ள தன் கைகள் மிகச் சிவப்பு நிறமடைய
நான்கு அடிகள் முன்னேறிச் சென்றும், பத்தடிகள் பின்வாங்கிப் போயும் பந்தடித்து
விளையாடல் புரிகின்றாள். |
|
(வி-ரை) |
திரிகூடம்-மூன்று
கொடிமுடிகள் ஒன்றாகக் கூடியது. அதனால் பொதிய மலைக்குத் திரிகூடமலை யென்பது
பெயராயிற்று, தத்துதல்-தாண்டுதல், பணைப்பு-பருமை; சுமை. நத்து; வலித்தல் விகாரம்
பெற்றது. சேப்ப-செந்நிறம் கொள்ள, நாலடி-நான்கு காலின் எட்டுதல் அளவு. ஓங்குதல்-மேலே
போதல், வாங்குதல்-பின்னடைந்து போதல். |
(19) |
இதுவுமது
இராகம்-பைரவி
|
தாளம்-சாப்பு
|
கண்ணிகள்
(1) |
செங்கையில் வண்டு கலின்கலின்
என்று செயஞ்செயம் |
|
என்றாட இடை |
|
சங்கதம் என்று சிலம்பு புலம்பொட
தண்டை |
|
கலந்தாட இரு |
|
கொங்கை கொடும்பகை வென்றனம்
என்று குழைத்து |
|
குழைந்தாட
மலர்ப் |
|
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
|
|
பந்து
பயின்றாளே; |
|
|
(2) |
பொங்கு கனங்குழை மண்டிய
கெண்டை புரண்டு |
|
புரண்டாடக்
குழல் |
|
மங்குலில் வண்டு கலைந்து கண்டு
மதன்சிலை |
|
வண்டோட
இனி |
|
இங்கிது கண்டுல கென்படும்
என்படும் என்றிடை |
|
திண்டாட
மலர்ப் |
|
பங்கய மங்கை வசந்த சவுந்தரி |
|
பந்து
பயின்றாளே; |
|
|
(3) |
சூடக முன்கையில் வால்வளை
கண்டிரு தோள்வளை |
|
நின்றாடப்
புனை |
|
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு
பாவனை |
|
கொண்டாட
நய |
|
நாடகம் ஆடிய தோகை மயிலென
நன்னகர் |
|
வீதியிலே
அணி |
|
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி |
|
அடர்ந்துபந்
தாடினளே; |
|
|
(4) |
இந்திரை யோஇவள் சுந்தரி
யோதெய்வ ரம்பையோ |
|
மோகினியோ
மன |
|
முந்திய தோவிழி முந்திய
தோகர முந்திய |
|
தோவெனவே
உயர் |
|
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கணி |
|
வீதியிலே
மணிப் |
|
பைந்தொடி நாரி வசந்தஒய்
யாரிபொற் |
|
பந்துகொண்
டாடினளே. |
|
|
|
|