(1) |
வானரங்கள்
கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் |
|
மந்தி
சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் |
|
கானவர்கள்
விழிஎறிந்து வானவரை அழைப்பார் |
|
கமனசித்தர்
வந்துவந்து காயசித்தி விளைப்பார் |
|
தேனருவித்
திரையெழும்பி வானின்வழி ஒழுகும் |
|
செங்கதிரோன்
பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் |
|
கூனலிளம்
பிறைமுடித்த வேணிஅலங் காரர் |
|
குற்றாலத்திரிகூட
மலைஎங்கள் மலையே; |
|
|
(2) |
முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும் |
|
முற்றம்எங்கும்
பரந்துபெண்கள் சிற்றிலைக் கொண்டோடும் |
|
கிழங்குகிள்ளித்
தேனெடுத்து வளம்பாடி நடிப்போம் |
|
கிம்புரியின்
கொம்பொடித்து வேம்புதினை இடிப்போம் |
|
செழுங்குரங்கு
தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும் |
|
தேன்அலர்சண்
பகவாசம் வானுலகில் வெடிக்கும் |
|
வழங்குகொடை
மகராசர் குறும்பலவின் ஈசர் |
|
வளம்பெருகும்
திரிகூட மலைஎங்கள் மலையே; |
|
|
(3) |
ஆடுமர வீனுமணி கோடிவெயில் எறிக்கும் |
|
அம்புலியைக்
கவளமென்று தும்பிவழி மறிக்கும் |
|
வேடுவர்கள்
தினைவிரைக்கச் சாடுபுனந் தோறும் |
|
விந்தைஅகில்
குங்குமமுஞ் சந்தனமும் நாறும் |
|
காடுதொறும்
ஓடிவரை ஆடுகுதி பாயும் |
|
காகமணு
காமலையில் மேகநிரை சாயும் |
|
நீடுபல
வீசர்கயி லாசகிரி வாசர் |
|
நிலைதங்கும்
திரிகூடமலை எங்கள் மலையே; |
|
|
(4) |
கயிலைஎனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே |
|
கனகமகா
மேருஎன நிற்குமலை அம்மே |
|
சயிலமலை
தென்மலைக்கு வடக்குமலை அம்மே |
|
சகலமலை
யுந்தனக்குள் அடக்குமலை அம்மே |
|
வயிரமுடன்
மாணிக்கம் விளையுமலை அம்மே |
|
வான்இரவி
முழைகள்தொறும் நுழையுமலை அம்மே |
|
துயிலுமவர்
விழிப்பாகி அகிலமெங்கும் தேடும் |
|
துங்கர்திரி
கூடமலை எங்கள்மலை அம்மே; |
|
|
(5) |
கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே |
|
கொழுநனுக்குக்
காணிமலை பழநிமலை அம்மே |
|
எல்லுலவும்
விந்தைமலை எந்தைமலை அம்மே |
|
இமயமலை
என்னுடைய தமையன்மலை அம்மே |
|
சொல்லரிய
சாமிமலை மாமிமலை அம்மே |
|
தோழிமலை
நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே |
|
செல்இனங்கள்
முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும் |
|
திரிகூடமலை
யெங்கள் செல்வமலை அம்மே; |
|
|
(6) |
ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற் கொள்வோம் |
|
உறவுபிடித்
தாலும்விடோம் குறவர்குலம் நாங்கள் |
|
வெருவிவருந்
தினைப்புனத்திற் பெருமிருகம் விலக்கி |
|
வேங்கையாய்
வெயில்மறைந்த பாங்குதனைக்குறித்தே |
|
அருள்இலஞ்சி
வேலர்தமக் கொருபெண்ணைக் கொடுத்தோம் |
|
ஆதினந்து
மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம் |
|
பரிதிமதி
சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம் |
|
பரமர்திரி
கூடமலை பழையமலை அம்மே. |