(1) |
சூர
மாங்குயிற் சின்னங்கள் காமத் |
|
துரைவந்
தான்துரை வந்தானென் றூத |
|
ஆல மாமுலை மின்னார்
அவரவர் |
|
அல்குல்
தேர்கள் அலங்காரஞ் செய்யப் |
|
பார மாமதி வெண்குடை
மிஞ்சப் |
|
பறக்குங்
கிள்ளைப் பரிகள்முன் கொஞ்சத் |
|
தேரின் மாரன்
வசந்தன் உலாவுந் |
|
திருக்குற்
றாலர்தென் ஆரிய நாடே; |
|
|
(2) |
காரைச் சேர்ந்த குழலார்க்கு நாணிக் |
|
கடலைச்
சேர்ந்த கறுப்பான மேகம் |
|
வாரைச் சேர்ந்த
முலைக்கிணை யாகும் |
|
மலையைச்
சேர்ந்து சிலையொன்று வாங்கி |
|
நீரைச் சேர்ந்த
மழைத்தாரை அம்பொடு |
|
நீளக்
கொண்டலம் தேரேறி வெய்யவன் |
|
தேரைச் சூழ்ந்திடக்
கார்காலம் வெல்லும் |
|
திருக்குற்
றாலர்தென் ஆரிய நாடே; |
|
|
(3) |
சூழ மேதி இறங்குந் துறையிற் |
|
சொரியும்
பாலைப் பருகிய வாளை |
|
கூழை வாசப்
பலாவினிற் பாயக் |
|
கொழும்ப
லாக்கனி வாழையிற் சாய |
|
வாழை சாய்ந்தொரு
தாழையில் தாக்க |
|
வருவி
ருந்துக் குபசரிப் பார்போல் |
|
தாழை சோறிட
வாழை குருத்திடும் |
|
சந்த்ர
சூடர்தென் ஆரிய நாடே; |
|
|
(4) |
அந்நலார்மொழி தன்னைப் பழித்ததென் |
|
றாடவர்
மண்ணில் மூடுங் கரும்பு |
|
துன்னி மீள
வளர்ந்து மடந்தையர் |
|
தோளை
வென்று சுடர்முத்தம் ஈன்று |
|
பின்னும் ஆங்கவர்
மூரலை வென்று |
|
பிரியுங்
காலத்திற் பெண்மையை வெல்லக் |
|
கன்னல் வேளுக்கு
வில்லாக ஓங்கும் |
|
கடவுள்
ஆரிய நாடெங்கள் நாடே; |
|
|
(5) |
தக்க பூமிக்கு முன்புள்ள நாடு |
|
சகல
தேவர்க்கும் அன்புள்ள நாடு |
|
திக்கெ லாம்வளர்ந்
தோங்கிய நாடு |
|
சிவத்து
ரோகமும் நீங்கிய நாடு |
|
முக்க ணான்விளையாடிய
நாடு |
|
முதிய
நான்மறை பாடிய நாடு |
|
மைக்க ணாள்குழல்
வாய்மொழி பாகர் |
|
வசந்த
ஆரிய நாடெங்கள் நாடே; |
|
|
(6) |
அஞ்சு நூறு மகம்கொண்ட நாடு |
|
அநேக
கோடி யுகங்கண்ட நாடு |
|
கஞ்ச யோனி
உதிக்கின்ற நாடு |
|
கமலை
வாணி துதிக்கின்ற நாடு |
|
செஞ்சொல்
மாமுனி ஏகிய நாடு |
|
செங்கண்
மால்சிவன் ஆகிய நாடு |
|
வஞ்சி பாகர்
திரிகூட நாதர் |
|
வசந்த
ஆரிய நாடெங்கள் நாடே; |
|
|
(7) |
மாத மூன்று மழையுள்ள நாடு |
|
வருட
மூன்று விளைவுள்ள நாடு |
|
வேத மூன்றும்
பலாஉள்ள நாடு |
|
விசேட
மூன்றுங் குலாவுள்ள நாடு |
|
போத மூன்று
நலஞ்செய்யும் நாடு |
|
புவன
மூன்றும் வலஞ்செய்யும் நாடு |
|
நாத மூன்றுரு
வானகுற் றால |
|
நாதர்
ஆரிய நாடெங்கள் நாடே; |
|
|
(8) |
நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம் |
|
நெருங்கக்
காண்பது கன்னலிற் செந்நெல் |
|
தூங்கக்
காண்பது மாம்பழக் கொத்து |
|
கழலக்
காண்பது பூந்தளிர் மத்து |
|
வீங்கக்
காண்பது மங்கையர் கொங்கை |
|
வெடிக்கக்
காண்பது கொல்லையின் முல்லை |
|
ஏங்கக்
காண்பது மங்கல பேரிகை |
|
ஈசர்
ஆரிய நாடெங்கள் நாடே; |
|
|
(9) |
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் |
|
ஒடுங்கக்
காண்பது யோகியர் உள்ளம் |
|
வாடக் காண்பது
மின்னார் மருங்கு |
|
வருந்தக்
காண்பது சூலுளை சங்கு |
|
போடக் காண்பது
பூமியில் வித்து |
|
புலம்பக்
காண்பது கிண்கிணிக் கொத்து |
|
தேடக் காண்பது
நல்லறம் கீர்த்தி |
|
திருக்குற்றா
லர்தென் ஆரியநாடே. |