பக்கம் எண் :

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த

திருஅங்கமாலை

பண்: சாதாரி

திருச்சிற்றம்பலம்

உற்றார் ஆருளரோ-உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தன்அல் லால்நமக்கு
உற்றார் ஆருளரோ

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த

திருவாசகம்

திருப்புலம்பல்

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.

திருச்சிற்றம்பலம்