பக்கம் எண் :

10

தீர்மானம்.

     தாம் - தீத்தாம் - தாம் - தெய் - தா - தெய் - தெய்
     தாம் - தீத்தாம் - தாம் - தெய் - தத்தெய் - தெய்
     தந் - தக - தக - தக - தக - தீந் - திகி - திகி - திகி - திகி
     தக - தக - தக - திகி - திகி - திகி - தளாங்கு தகதிக
                                        ததிங்கிணதோம் (மோகினி)

அனுபல்லவி.


         வாகு பெறுமுயர் தஞ்சைச் சரபோஜி
         மன்னர் தமைக்கண்டு முன்ன மயல்கொண்ட           (மோகி)
        

சரணங்கள்.


         பணிமதி நுதலில் வசிகர திலகமுன்
         முணவ ரருமன முருக வொளிதர
         கனதன மருவு தரள மணிவட
         மலையி னிழிதரு மருவி தனைநிகரவே              (மோகினி)

         மகர மிலகிய துவச னிரதியெனும்
         வடிவ வனிதையி னதிக மிவளென
         அகமதி லெணியடி மயிலே குயிலே
         அடிமை வருவனெனப் பிறகே தொடர்ந்திடவே       (மோகினி)

         கமலை யிவளென வுருவசி யெனநீள்
         கயல்விழி மேனகை யாமிவ ளெனவே
         அமரர் மெச்சுதி லோத்தமை யெனவந்
         தவனியி னுலவு மொருமின லெனவே               (மோகினி)
        

சேடிகள் விருத்தம்.


     தங்குபெருந் திறல்வீரர் சேனைக்கா வலர்களொடு தானு மோர்பால்
     மங்கையர்சே னாபதியாய்ச் சேவித்து வருமதனன் மதன வல்லி