காட்சி III.
மதனவல்லி நந்தவனத்தில் பந்தாடுதல்
அதைக் குறித்து சகிகள் பாடுதல்.
___
அந்தமிகு மதனவல்லி தஞ்சைவளர் சரபோஜி யண்ணன்மீதே
சந்தமுறுங் கவிப்புலவ ருரைத்தபுகழ்க் கவிகடமைத்
தடங்கொள் வீணைத்
தந்திரியி னுறப்பாடிச் செங்கைவளை கலகலெனத் தனது
கொங்கைச்
சுந்தரங்கொள் கந்துகத்தை யெடுத்தடித்து விளையாடத்
தொடங்கி னாளே
ஏந்தெழிளார் மதனவல்லி யெடித்தடிக்குங் கந்துகமேந்
திழையார் முன்னம்
கூந்தலினை யவிழ்த்தாடை நெகிழ்ந்துமணி வடஞ்சிதறச்
கொங்கை சேர்ந்து
காந்தனியற் றிடுஞ்செய்கை செய்தல்கண்டு வெட்கியதைக்
கைவிட் டாங்கே
வாய்ந்தநெடு வீதியுற்றாள் சரபநரேந் திரன்பவனி
வரல்கண் டாளே
___
சகிகள் பாட்டு முடிந்ததும், தூரத்தே மோகினி
வருவதைக்கண்டு அவளை வர்ணித்தல்.
___
சகிகள் பாட்டு
ராகம் - சௌராஷ்டிரம்] [தாளம் - மிச்ரம்
பல்லவி.
மோகினி வந்தாள் அதிரூப
மோகினி வந்தாள்
|