பக்கம் எண் :

8

         தக்க - தக்க - தக்க - தக்க
         திக்கி - திக்கி - திக்கி - திக்கி
         தாந்தீ - தாந்தீ - தக்க - திக்கி ததிங்கிணதோம்

         த - தெய்ய - தெய்ய - தெய்யதாதாதா தீ
         தா - தை - தளாங்கு தகதிகி தக ததிங்கிணதோம்

     கந்தமலர்க் காந்தளினை முந்துமலை யேறவைத்த கையினாள் - மாற்றில்
     கனத்தசெங் கனகத்தைமே லடித்துப் பணிசெயச்செய் மெய்யினாள்
     தங்கமுலை பம்பரத்தை யம்புவிமீ தாட்டிடுமா தங்கமே - இடை
     சாயலுறு நற்றுடியை வாயிலறை வித்திடுமோர் சிங்கமே
     புங்கமுறு மம்புயத்தைப் பங்கமுற்ற தென்னவொளிர் முகத்தினாள் -                                                          வானிற்
     பொலிந்திலங்கு வெண்பிறையைக் களங்கமுற்ற தென்றோது நகத்தினாள்
     கண்டோர் மனத்தைத்தன் சுழிக்கு ளழுத்திடும் உந்தியாள் - கொங்கைக்
     களிற்றுத் தறியென்ன வயிற்றின்மே லுரோம பந்தியாள்
     விண்டிடுங் கன்னலைச் சாறு பிழிந்திடுந் தோளினாள் - மாவின்
     விளங்குந் தளிர்கண்டு பயந்தங் கிருக்கச்செய் தாளினாள்
     மருவுற்றி டுங்குமிழை வனத்தி லொதுக்குவித்த மூக்கினாள் - இந்த
     வையத் திராதமுதம் வானத் தொளிக்க வைத்த வாக்கினாள்
     தரும னெனக் கூற்றை யெவருஞ் சொல் லக்கூர்த்த நயனத்தாள் -                                                         தஞ்சைச்
     சரபோஜி நரபாலர் கருணை தனக்கேற்ற வயனத்தாள்

 மேற்கண்ட தீர்மானம்.                          (அந்த மதனவல்லி)

காட்சி முடிவு.
___