மகாராஜா பவனிவருகிறபோது சகிகளுடன்
மோஹினி ஊர்வலத்தைக் கண்ட செய்தியைக்
கூறுகிறாள்
---
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
தரணிபுகழ்ந் திடுந்தஞ்சைச் சரபநரேந் திரன்பவனி
தன்னைக்கண்டு
வரியளிசூழ் மலர்க்கூந்தன் மதனவல்லி யெனுமொருமின்
மருகினூடே
பெருமயலுங் கிறுகிறுப்புங் கொண்டந்த மன்னவனைப்
பின்றொடர்ந்து
மருவுதற்குக் காதல்கொண்ட தகைசொல்வே னெவர்களுக்கும்
வகைசொல்வேனே
காட்சி முடிவு.
___
காட்சி II.
சகிகள் தோன்றி பவனிவரும்போது மகாராஜாவைக்
கண்டு காமுற்ற தலைவி மதனவல்லியை வர்ணித்தல்.
___
சகிகள் பாட்டு.
ராகம் - பிலஹரி] [தாளம் - மிச்ரம்
அந்த மதனவல்லி வண்டைநான் கொண்டிடச்செய் யோதியாள்
பாரில்
அங்கனையார் தங்களினுத் துங்கமுறு பதுமினிச் சாதியாள்
தீர்மானம்.
தாந் தத்தீ - தா - தீ - தீந் தக்க
தாந் தத்தீ - தா - தீ - தீந்தக்க தாந் தத்தீ
தா - தாந்தத்தீ - தீந்தக்க - தாந்தத்தீ
தா - தாந்தத்தீ - தீந்தக்க (துரிதகாலம், 2 தடவை) |