எங்களுயர் தஞ்சைநகர்ச் சரபோஜி மன்னவன்ற
னெழீலை நோக்கித்
துங்கமனத் திடைக்காதல் கொண்டிடுமுன் மலர்வாளி
சொரிந்திட் டாளே.
___
மோகினி விரகதாபத்துடன் பிரவேசிக்கிறாள்.
மகாராஜாவைக் கண்டு மோகித்த மோகினி மன்மத
பாணத்தினால் வருந்துகிறதைக் கண்டு சகிமார்கள்
அவளுக்கு சீதளோபசாரஞ் செய்தார்கள்.
___
சகிகள் விருத்தம்.
மதனன்விடு மலர்க்கணையாற் றுயரமேவும்
மதனவல்லி தனைச்சூழ்ந்தோர் மனைக்குட் சேர்த்து
விதமுறுநல் லிளவாழைக் குறுத்தைப் பாய்மேல்
விரித்ததினிற் படுக்கவைத்துப் பனிநீர் தொட்டு
வதனமதைத் துடைத்திலகு துகிலாற் காற்று
வரவீசிச் சிறிதறிவு தோற்றச் செய்தார்
இதமுறுசீர்ச் சரபோஜி மன்னன் றஞ்சை
யிடத்திலவள் காமனைப்பார்த் திதுசொல்வாளே.
___
தீர்மானம்.
தத்தோங்கா - ததிமி-தகிடதக - தகததிங்கிணதோம்
தகதோங்கா - ததிமிதகிடதக - தகததிங்கிணதோம்
தத்தோங்கா - தகதோங்கா - தத்தோங்கா
தகதோங்கா - தக்கிறுது - ததிங்கிணதோம்.
சகிகள் போகிறார்கள்.
___ |