மோகினி விரக வேதனையால் மன்மதனைக்
குறித்து பாடல்
கண்ணிகள் மன்மதோ பாலம் பனம்.
___
ராகம்-பந்துவராளி] [தாளம்-மிஸ்ரம்
பிரபவனாகிப் பிரஜோற்பத்தி செய்கின்ற
மன்மதா-இன்று
பேதையென் றென்னைப் பரிதாபி யாக்கலென்
மன்மதா
பரவுங் கடலினைத் துந்துபி யாக்கொண்ட
மன்மதா-நீயும்
பரவைமார் களுக்குவி ரோதியா யினதென்ன
மன்மதா
வானின்மேற் கோடுந்துன் மதியைக் குடையாக்கி
மன்மதா-காற்றாம்
வடக்கோடுந் தேர்கொண்டா யிதுவென்ன காலயுத்தி
மன்மதா
மீனகே தனத்தினால் விஜயம் பெறலாமோ
மன்மதா-யார்க்கும்
விகுருதியா காதிருந்தான் மிகவும் ஜயமாமே
மன்மதா
தேனார் மலரம்பா லானந்த மடைகின்றாய்
மன்மதா-சீறும்
திறவம்பொன் றுளதாயிற் பிரமாதி யாவையே
மன்மதா
மானோர் கறமுற்ற ஈசுவரன் முன்னாளின்
மன்மதா-உன்னை
வாட்டிய காலையிற் காட்டுங் குரோதியல்லை
மன்மதா
|