தெரியுமிள வுலகத்தி லேவர்தீ லகத்தினால்
மன்மதா-என்மேல்
சித்திர பானுவைப்போன் மெத்தவுங் காய்கிறாய்
மன்மதா
சரபோஜி மகராஜர் தமைநான் மருவச்செய்
மன்மதா-நீ
சருவஜித் தாகிமே லக்ஷய னாகுவாய்
மன்மதா.
ஸ்வரம்.
ச, க்கரி கமா, கரிநி, சரிகமபா,
பாம, கமதாம, கரிநி, சரிகரீ, கமபகா
மபதநிசா, நிதபமாகரி, சரிகாம.
(பிரபவ)
பிறகு மோகினி சந்திரனைப் பார்த்து பாடுகிறாள்.
___
எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
ஒண்முகில்போ லுதவுசர போஜி மன்னன்
உள்ளமகிழ்ந் துறைதஞ்சை யிடத்துமேவும்
தண்ணறுங்கோங் கரும்பென்னக் கமல மென்னத்
தகுமகுட மெனச்செம்பொற் கும்ப மென்ன
வண்ணமலை யெனமுளைத்துப் பணைத்தெழுந்து
வயங்குமணி வடஞ்சுமந்து நெருங்குங் கொங்கைப்
பெண்ணமுத மனையவள்வி்ண் மதியை நோக்கிப்
பேசுவா ளிந்தவகை யேசு வாளே.
___
|