மதனவல்லி தென்றலைக் குறித்துச் சொல்லுகிறாள்
___
வெண்பா.
வென்றி மதவேளை விண்மதியை நோக்கிமனம்
கன்றி வெறுத்துரைத்த காரிகையாள் - பின் றொடெர்ந்து
தென்றலை நோக்கித் தியங்கி யுரைக்கின்றாள்
என்றனைநீ வாட்டுதலே னென்று
___
மதனவல்லி தென்றலை குறித்து.
___
பாட்டு.
ராகம் - காம்போதி] கண்ணிகள். [தாளம் - ஆதி
கந்தமிகுந் சந்தமல யந்தனி லிருந்து வந்தாய்
தென்றலே-தமிழ்க்
காரிகையின் சீர்மையுறு நேர்மையறி யாததென்னே
தென்றலே
தீர்மானம்.
திந்த, தத்த, தீந்த, தத்த
திந்தத்த, தீந்தத்த, தீந்த, தீந்தரிகிடதக
தக ததிங்கிணதோம் தா-தை (2 தடவை)
தீந் தரி கிட தக தக ததிங்கிணதோம்
தா.. கிட தக தை..
தா தாதாதீ, தாதாதீ, தாதாதீ,
தக ததிங்கிணதோம்
தத் தெய்யா தெய்யா தெய்யா தா தா தாதீ
(<ச> சவுக்க காலம் 4-தரம் மத்தியம காலம் 4-தரம்)
தா தை தளாங்கு தக திகி தக ததிங்கிணதோம்
தா.. தை.. தாதை-தளாங்கு தக ததிங்கிணதோம்
|