பக்கம் எண் :

18

ஸ்வரம்.


     பா த பாத பமா ப - கா ம ப தா - ம பா த நி பா ச நி
             தபம - பா
     ம ப த நி தா - சநி தா - ரிசநி பாத - சா நி த ம க (கந்த)
             மா க சா - ரி க ம ப த

___

மதனவல்லி குயிலையும் மாலைப்பொழுதையும்
நோக்கிப் பாடுகிறாள்.

___

 ராகம்-சங்கராபரணம்.]        கண்ணிகள்.        [தாளம்-மிஸ்ரம்

        

         ஏற்ற மன்மதன் காளமே-இன்று
             எனக்கு நீயொரு காளமே
         போற்றி டந்திமுன் மாலையே-மிகப்
             போதச் செய்வதென் மாலையே
         தோற்று சோலைநல் லலர்களே-நாடித்
             தூற்று வார்சில ரலர்களே
         ஆற்றல் கொண்டிரை வேலையே-மாதர்க்
             கல்லல் செய்வது வேலையே
         ஓத வேலையுள மச்சமு-மிக
             உற்ற வென்றுமுள மச்சமே
         மீது சொறிடு வங்கமே-நின்று
             மெலியு மென்வடி வங்கமே
         கோதில்மாதவள வன்னமே-இங்குக்
             கொண்டி லேனிவள வன்னமே
         மாதண் போதுறு காசையே-சரப
             மன்னர் மேலெனக் காசையே