ஸ்வரம்.
பா ரிகம ப மக ரிச நிசா-பதநிச-நிசரிகம-பா
பமக மபத-நிச நிபத நிசரி-சா நிதப-பாமகரி-சநி தநி
(ஏற்ற மன்மதன்)
___
வெகுநேரமாகியும் சகிகள் வராமையைக் குறித்து
மோகினி துயருறல்.
___
எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
மன்மதனே வெண்மதியே தென்றலேபார்
வளைகடலே கடற்கறையே குயிலே காவே
என்றிவற்றை நோக்கிமிக வெறுத்துப்பேசும்
எழின்மதன வல்லியுயர் தஞ்சை மேவும்
மன்னர்பிரான் சரபோஜி மன்ன ரென்னும்
மணாளருக்கென் செய்தியெலாம் வகுத்துக் கூற
இன்னகைதோற் றிடுஞ்சகியை வரக்கா ணோமென்
றெண்ணினா ளவளுமெதிர் நண்ணி னாளே
___
சகிகள் பிரவேசம்.
___
பாட்டு.
ராகம்-சாவேரி] பல்லவி. [தாளம்-ஆதி
சகிவந்தா ளையா மதனவல்லிக் கிசைந்த
சகிவந்தாளைய்யா
தீர்மானம்.
தா, தா, தா, தா, தீ, தகதண, தகஜொணு, தாகத தாதி,
ததிமி தகிட தக, தக ததிங்கிணதோம்
|