தக்கத்தா, தா, தாதீ, தகதண, தகஜொணு, தாகத, தாதி
ததிமி தகிட தக, தக ததிங்கிணதோம்
தா தா தா தா தீ, தக ததிங்கிணதோம்
தக்கத்தா தா தாதீ, தக ததிங்கிணதோம்
தா தா தித் தித் தெய் தக்கத்தா தித்தித் தெய்
தந் தக தக தக, திந் திகி திகி திகி
தக தக திகி திகி தக ததிங்கிணதோம் (சகிவந்தாளையா)
அனுபல்லவி.
மகிதலம் போற்றிடுஞ் சரபோஜி மன்னவன்
மருவு முயர்தஞ்சை நகர மிதுதன்னில் (சகி)
சரணங்கள்.
கலீர்கலீ ரென்னச் சிலம்புக ளார்க்கக்
கடுநடை யுடனே மலர்முகம் வேர்க்கப்
பலபல பெண்களங் கேநின்று பார்க்கப்
பக்ஷமா மதனவல்லி மனத்துயர் தீர்க்கச் (சகி)
சரசமா கக்கூடி விளையாடப் பண்டு
சரபோஜி மகராஜர் தயவுனக் குண்டு
பரவச மாயழைத்து வருகின்றேன் கண்டு
பயந்திடா தேயன்று திடஞ்சொல்லிக் கொண்டு (சகி)
வந்த சகியைப்பார்த்து மோகினி வசனம்.
---
மோகினி:- சகியே! மதனனால் வாடும் என்னை இவ்விதம் தனியே விட்டுச் செல்வது உங்களுக் கழகா.
உடன் மோகினி பாட்டு.
ராகம் - நாதநாமக்கிரியை] பல்லவி. [தாளம் - ஆதி
மதன்கல கத்திலென்னைத் தனியிங்கே வைத்தென்ன
விதமாகப் புறஞ்சென்றா யடிநீ சகியே (மதன்)
|