தீர்மானம்.
தா, தரித தணதா, தணத ஜொணுதா,
ஜொணுத திமி, தா தா தீ
தா, தரித தணதா, தணத ஜொணுதா,
ஜொணுத திமி, தா தா தீ
தா, தணா தாஜொணு, தாதிமி, தாகிட
தா, தணா தாஜொணு, தாதிமி, தாகிட (துரிதகாலம்)
தத்தீத்தா, க்ருதக, ததிங்கிணதோம் (மதன்)
அனுபல்லவி.
கதியெனக் குன்னையல்லாற் காணேனே வேறுநான்
அதுதானுன் மனமறி யாததோ சகியே (மதன்)
சரணம்.
சரபோஜி மகராஜர் பவனிதன் னைக்கண்டேன்
மருவநா னவர்மேல் மால்கொண்டேன் சகியே
பருவ மடந்தையர் பலர்நின்றா ரெனைப்போல்
ஒருவரு மயல்கொள்ளக் காணேனே சகியே (மதன்) ___
மோகினி பின்னும் அந்த சகியைப்பார்த்து
ஸ்ரீ சரபேந்திர பூபதியிடம் தூது போகுமாறு
வேண்டுகிறாள்.
___
மோகினி வசனம்:- பிரிய சகியே! உங்களில் யாராவது ஒருவராவது துணிந்து அந்த மகாராஜாவிடம் சென்று என் விரக வேதனையைத் தெரிவிக்கலாகாதா!
|