பக்கம் எண் :

22

சுற்றிலும் பார்த்து ஒருவரும் பேசாதிருத்தலைக் கண்டு
ஒரு சகியைப் பார்த்து.

___

பாட்டு.

 ராகம் - கல்யாணி]           பல்லவி.           [தாளம் - ஆதி

        

         இந்தமட்டுஞ் செய்யடி சகியே நீ
         இந்தமட்டுஞ் செய்யடி

அனுபல்லவி.

         சந்ததம் வளருந்தஞ்சைச் சரபோஜி மன்னர்தம் பால்
         சார்ந்தென் விரகமெல்லா மோர்ந்திடச் சொல்லவேண்டும்  (இந்த)

     மோகினி வசனம்:- பிரிய சகிகாள்! எனக்காக இந்த உபகாரமாவது
  நீங்கள் செய்யக்கூடாதா?

     சகி 1 வசனம்:- அம்மா அந்தவேலை எங்களால் முடியாது.

சரணம். 1

     அவருக் கெனைப்போலு மடந்தையா ரொருக்காலே
     அறியாமன் மயல்கொண்டேன் சிறியாளா கையினாலே
     கவலையுற் றிடமத னெறிகிறான் மலர்க்கோலே
     கருது மிதையவர்க் குரைநடந் தனம்போலே                 (இந்த)

     மோகினி வசனம்:- அடி பாங்கிகாள்! சிறியாளாகிய நான் அவர்மேல்
  மையல்கொண்டு நான் படும் மன்மதாவஸ்தையை அவரிடம்
  தெரிவிக்கலாகாதா?

     சகி 2 வசனம்:- மதனவல்லி இந்த வேலையைவிட்டு வேறு எது
  சொன்னாலும் நாங்கள் செய்கிறோம்.

___