சரணம். 2
தென்றலம் புலிகட்கென் செய்தேனா னபசாரம்
தெரிக்கு மலைசெய்வ தேதிப் படிகோரம்
நன்றவர்க் கிவையெல்லாம் நவிலுவா யிந்நேரம்
நாமிரு வருமிருந்த நன்மைக்கிங் குபகாரம் (இந்த)
மோகினி வசனம்:- ஐயோ! நான்படும் வேதனையை சற்றும் அறியாது இந்தத்தென்றலும் சந்திரனும் என்னை வாட்டுகிறார்களே. அடி சகிகாள்! (ஒரு சகியின் முகவாய்க்கட்டையைப் பிடிக்க சகி தூர விலகல்).
___
சரணம். 3.
மனத்தினைத் தூதுவிட்டே னதன்செய்தி யோராமல்
மகிழ்ந்தவ ரிடத்தி லிருந்தது வாராமல்
அனத்தினை யனுப்பலா மதுசொல்லுஞ் சேராமல்
அதுநிற்க நீயேசெல் வருத்தத்தைப் பாராமல் (இந்த)
மோகினி வசனம்:- தோழிகாள்! நான் தூதாக விடுத்தவை யெல்லாம் அவரிடம் போய்ச் சேராமலே போய்விட்டது. நீங்களாவது வருத்தத்தைப் பாராமல் சென்று வரலாகாதா?
சகி 3-4 வசனம்:- அம்மா! ராஜசபையை அணுகி உங்களுடைய விஷயத்தை எவ்விதம் தெரிவிப்போம்; எங்களால் முடியாது.
மோகினி வசனம்:- அடி சகிகாள்! அங்கு போகும் வகையையும் சொல்லும் வகையையும் நான் தெரிவிக்கின்றேன். மேலும் இந்த ஆபரணாதிகளை யெல்லாம் உங்களுக்குக் கொடுக்கிறேன். சற்றே தயவு செய்யுங்கள்.
|