பக்கம் எண் :

24

சகிகள் சம்மதித்ததைப் போல் பேசாமலிருக்க அதைக்
கண்டு மகிழ்ந்த மதனவல்லி சந்தோஷத்துடன்
பாடுகிறாள்.

___

 ராகம்-தோடி]                                [தாளம்-மிச்ரம்

பல்லவி


         சொல்லும் வகையெல்லா முறையா யுனக்குநான்
         சொல்லுகின் றேனடி தேனே.

அனுபல்லவி


         வல்லோர் புகழ்தஞ்சைச் சரபோஜி மகராஜர்
         மனத்துக் கிசைந்திடுந் தூதுநீ யினிதாகச்            (சொல்லும்)

சரணங்கள்


     செஞ்சுட ருதிக்குமுன் னெழுந்து புனல் படிந்து
     திருநீறணிந்து ருத்ராக்ஷ மணி பூண்டு
     நெஞ்சினி லெழுமன்பி னொடுசந்தி வந்தனம்
     நிலைதரு சிவபூஜை புரிகுவ ருடனுண்டு                 (சொல்லும்)

     விஞ்சை தருவேத புராணங்க ளோதிடுவோர்
     விருப்புடன் பெரியோர்பா லிருப்பார்கேள் வியினீண்டு
     கஞ்சமலர்த் தாரினர்க்குஞ் செம்பொன்முதற் றானங்கள்
     கனக்கவே செய்வரிந்தக் காலங்களிற் கூறாதே            (சொல்லும்)

     மச்சங்கொங் கணமீழ மலையாளஞ் சாளுவம்
     வங்காளந் றுலுக்காண மராடஞ்சீ னத்தோடு
     கொச்சி முதலான தேசமன் னவர்வந்து
     கூடிப் பணிந்துநிற்குஞ் சமயத்தி லுரையாதே             (சொல்லும்)

     மெச்சுமதி மந்திரிமார் தளகர்த்தர் முதலான
     மேலோர்தஞ் செய்கைசொல்லி வினவுங்காற் பகராதே