கட்டியக்காரன் பாட்டு.
ராகம் - நாதநாமக்கிரியை.] [தாளம் ஆதி.
பல்லவி
கட்டியக் காரன்வந் தானே - ஒய்யாரமாகக்
கட்டியக்காரன் வந்தானே
(கொறப்பு) தாக்க, தீந்த, தத்த, தீந்த, தத்த,
தீந், தத்த, தீந், தத்த, தீந்த, தீந்தரி கிடதக
தக ததிங்கிணதோம். தா-தை (2 தடவை)
தீந்தரி கிடதக தகததிங்கிணதோம் தா-கிடதக தை
தாதா தாதீ, தாதாதீ, தாதாதீ, தக ததிங்கிணதோம்
தத்தெய்யா தெய்யா தெய்யா தாதாதாதீ
(மேற்படி சவுக்க காலம் 4 தரம், மத்தியம காலம் 4 தரம்)
தா தை தளாங்கு தகதிகிதக ததிங்கிணதோம்
கட்டியக்காரன் வந்தானே
அனுபல்லவி
கட்டிய கொண்டை வனப்புறு சென்னியிற்
கட்டழ குருமாலை கட்டிக்கொண்டு நல்ல (கட்டியக்)
சரணங்கள்
மிகவெழி லுற்றிடு காவிச் சல்லடம்
மிசைசுற் றிடுகச்சை யிறுக்கியே
தகதிமி தக்கிட திக்கிட வென்னத்
தருக்குடன் மேன்மீசை முறுக்கியே (கட்டியக்)
புகலுறு நெற்றியி லிட்டிடு சிந்துரப்
பொட்டுடன் பொற்பிரம் பேந்தியே
மகாராஜ ராஜுக்குச் சரபோஜி ராஜுக்கு
மந்தர ராஜுக்குச் சலாமெனவே (கட்டியக்)
|