தரணி புகழ்ந்திடு மன்னர்கள் சூழத்
தகவுடு கணத்திடை மதியென மேவும்
வரபோ சலகுல மணியினைக் கண்டு
சரபோஜி மகாராஜா சலாமெனப் பணிந்து. (கட்டியக்)
___
கட்டியக்காரன் வசனம்.
ராஜாதி ராஜன், ராஜமார்த்தாண்டன், ராஜ கோலாகலன், தஞ்சை நகர் ஸ்ரீசரபோஜி மகாராஜா அவர்கள் பேரில் குறவஞ்சி நாடகம் பாடி பூர்த்தியாகும் பொருட்டு ஸ்ரீ மகாகணபதி துதி செய்வோம். ஸ்ரீ கணபதி வருகின்றபடியால் வீதிகள் தோறும் மகுட தோரணம் கட்டி பூரண கும்பங்கள் வைத்து அலங்காரம் பண்ணும் பொருட்டு சபையில் சொல்ல வந்தேன்.
___
திரை பிடிக்கவும்.
கணபதி-விருத்தம்.] [ராகம் - நாதநாமக்கிரியை.
சந்ததமு மெண்மர்குடி கொண்டு நிற்கத்
தாரணியி லனைவர்களு மகிழ்ந்து வாழத்
தொந்தமின்றி யுழுவைபசுத் துறையிற் கூடிச்
சுகமாக விளையாட வரசி யற்றும்
சுந்தரனாஞ் சரபோஜி மன்னன் மீது
சொல்லுகின்ற குறவஞ்சித் தமிழைக் காக்கத்
தந்திமுக னாகுவா கனமீ தேறிச்
சபையோர்க்குக் காட்சிதரத் தோன்றினாரே.
___
திரை விலக்கல்
ஸ்ரீ கணபதி பிரவேசம்.
___
ராகம் - மத்தியமாவதி.]
[தாளம் ஆதி.
பல்லவி
கணபதி வந்தாரே -கருணாகரரான
கணபதி வந்தாரே.
|