பக்கம் எண் :

4

அநுபல்லவி

      மணமலர்ச் சோலைசூழ் தஞ்சைச் சரபோஜி
      மகராஜன் சபைதனி லனைவரு மகிழ்ந்திட               (கணபதி)

சரணங்கள்

      ஆகுவா கனர்வந்தார் அம்பிகை தனயர் வந்தார்
      பாகசா தனன்போற்றும் பாதபங் கயர்வந்தார்             (கணபதி)

      வாமன ரூபர் வந்தார் மகேசுவர புத்ரர் வந்தார்
      சோமசே கரர்வந்தார் சூர்ப்பகர் ணர்வந்தார்             (கணபதி)

      ஐந்து கரத்தர் வந்தார் ஆனைமா முகத்தர் வந்தார்
      தொந்தி வயிற்றர்வந்தார் தொழுமொற்றைக் கொம்பர்
                                    வந்தார்             (கணபதி)

கட்டியக்காரன் கணபதியை நமஸ்கரித்து பூஜை செய்தல்.

கட்டியக்காரன் வசனம்

     இன்றையதினம் சபையில் நடத்தப்போகும் இச் சரபேந்திர பூபால
 குறவஞ்சி நாடகம் விக்கினமின்றி பூர்த்தியாகும் பொருட்டு வரமருள
 வேண்டும்.

___

கணபதி வசனம். ததாஸ்து

விநாயகர் மறைதல்


     உடன் கட்டியக்காரன் ஸ்ரீ சரபேந்திரர் மகிமையும் நகர் வளமும் நீதி
 செலுத்தும் மகிமையும் அவர் பவனி வருதலும் சொல்லுகிறான்.

___