மின்னிடையாள் மதயானைக் குலஞ்சூழ் தஞ்சை
வீதிதனிற் பிடியெனவே நடந்தாங் கெய்தி
மன்னர்பிரான் சரபோஜி மன்னன் றன்பால்
வகுத்துரைக்குஞ் சமயமெதிர் பார்த்து நின்றாள்
அன்னதற்கு ளவளவளை வரக்கா ணேனென்
றாற்றாமற் சிலசொற்க ளறைகின்றாளே.
___
உடன் மதனவல்லி பாட்டு
___
ராகம்-அட்டாணா] [தாளம்-மிச்ரம்
பல்லவி
இன்னும் வரக்காணேனே சகியைநான்
இன்னும் வரக்காணேனே
அனுபல்லவி
மன்னர் புகழுந்தென் றஞ்சைச் சரபோஜி
மன்னன்பாற் றூதுசென்ற கன்னிகை தனையிங்கே
(இன்னும்)
சரணங்கள்
பாவாயென் றேனிங்குப் பாவாயென் றாளந்தப்
பாவிக்கென் னாவி பதைப்புத் தெரியாதே
காவாய்க் குயிலனங் கூவி வதைக்குது
காமன் கணையென்மே லோவா துதைக்குது
(இன்னும்)
பாலனஞ் செய்திடன் பாலன மேயென்றேன்
பாலனங் கொண்டுநின் பால்வரு வேனென்று
மேலகன் றாள்மதி தாமதி யாள்சொல்லும்
வேலை தெரிந்துநிற்பாள் போல விருக்குது
(இன்னும்)
|