பக்கம் எண் :

28


         பிரியலென் றவ்வேள் பிடித்தகை விரல்கள்போல்
         மருவிடு முன்கை மனிவளை வனைந்து
         சந்திர னிரண்டெனத் தந்திவெண் கோட்டுச்
         சுந்தரத் தோடு தொகுசெவி யணிந்து
         குன்றிமா மணியுங் குலச்சங்கு மணியும்
         துன்றிடு கவடியுந் தொகுத்திடு பணிகளும்
         புலிப்பற் றாலியும் புனைந்துமாத் திரைக்கோல்
         வலக்கையி லேந்தி மணிக்குறக் கூடை
         மருங்கினி லிடுக்கி வசிகரத் திலகம்
         இருங்கதிர் நெற்றி யிடைத்தரித் தெய்தி
         சீருறு பொருளாற் றிடத்தினாற் றனக்கு
         நேரிலா தோங்கிய நேரிமா மலையும்
         ஞாலந் தன்னி னண்ணிடு முயிர்க்கெலாம்
         காலமோர்ந் துதவுங் காவிரி நதியும்

         பொன்னுல கென்னப் புவிபுகழ் சிறப்பு
         மன்னிய சோழ வளநா டதுவும்
         சக்கர வாளமுந் தகுபுறக் கடலும்
         இக்குவ லயத்தை யினிதுசூழ்ந் திடுதல்போல்
         கார்வளர் மதிலும் நீர்நிறை யகழியும்
         மஞ்சுறச் சுலவும் தஞ்சைமா நகரும்
         பற்றலர் குழுவைப் பகர்புறத் தொதுக்கி
         வெற்றிகொண் டிலகும் வெற்றிமா லிகையும்
         உச்சையிச் சரவமா முயர்பரி யென்ன
         விச்சையி னெழிலின் மிகுபரித் திரளும்
         நிலவுமெண் டிசையினு நிலவுறு மிபங்கள்போல்
         குலவிடு முன்றில்சூழ் குஞ்சுரக் குலங்களும்
         பூமிவா ழரசர் பொருந்துசீ ரெவற்றினும்
         நாமுயர் வினமென நாட்டிய பதாகையும்
         மன்றல்பே ருதவி வலனுறு வெற்றியால்
         முன்றிலின் முழங்கு மூவகை முரசும்