பக்கம் எண் :

29


         மானமுற் றிலங்கு மனுநூன் முறையே
         நானிலந் துதிக்க நடத்துசெங் கோலும்
         பிரகதீ சுரர்தம் பேரரு ளாற்பெறு
         சரபோஜி மன்னர் தமையெதிர் போற்றி
         அன்னவ ருதவிய வளவில்பொற் பணிகளும்
         மன்னெழிற் கலைகளும் வரிசையாக் கொண்டே
         ஆவணஞ் சந்நதிக ளணிநெடு வீதிகள்
         மேவியங் கிருக்கு மின்னனா ரெவர்க்கும்
         கையினிற் காலிற் கலந்திடு ரேகையும்
         மெய்யுறு மறுவொடு விளங்கிடு தழும்பும்
         சுழிகளு மின்னுந் தோற்றுசில் குறிகளும்
         விழியினா னோக்கி மெய்ப்பல னுரைத்திட்
         டவரவ ருதவிடு மணிகளுங் கலைகளும்
         குவிதரு நிதியுங் கொடுவர வன்னாள்
         குறிப்புவரு நெறிப்புமொழி முறுக்குமதி லுருக்குநிறை
         களிப்புமிசை நெளிப்புமியல் பசப்புமுலை யசைப்பு மெதிர் முறு

         கண்டிளைஞ ரானவர்கண் மண்டியரு கேயுலவ
         கெண்டைவிழி யாயொருசொ னின்றுசொல டீயுரிய
         தொண்டரல வோவெளிய மின்பமுற வேபுகலும்
         உனது மனமறிய மனது பதறுதடி
         எனமு னவிலமிக வவளு நலதுபினர்
         வந்துசொலு வேனதுங்கள் சிந்தைமகிழ் கூறவிங்கு
         நின்றிடுக நின்றிடுக வென்றுரைசெய் தந்தமிகு
         கயவிரண் டிலகு கலைமதி தன்மேல்
         புயல்புறஞ் சூழப் பூத்ததோர் கொடியோ
         புவியினில் வந்து பூண்பல புனைந்து
         நவிலனம்போல் நடந்திடு மின்னோ
         இரதியோ வரம்பையோ வெழிலூர் வசியோ
         திருவெனு மடந்தையோ திலோத்தமை தானோ