பக்கம் எண் :

30

             என்னவொண் ணுதலா ரியல்கண நடுவே
             மன்னிவீற் றிருக்கு மதன வல்லிதன்
             பொன்மனைக் கெதிருறப் பொற்பு
             மன்னிடு மறுகினில் வந்தணைந் தனளே.

___

குறத்தி வருதலை தலைவிக்கு பாங்கிகள்
தெரிவிக்கின்றனர்.

___

 ராகம் - பியாகடை]          பல்லவி          [தாளம் - ஆதி

            

             குறத்தி வருகிறாளம்மா குறி சொல்லும்
             குறத்தி வருகிறாளம்மா

தீர்மானம்

         தீனுத, தத்திமி, தாகதஜம், ததஜம், கிடதகஜம்,
         தகணக, தகஜொணு தாகததாதி, ததிமிதகிடதக
         தா கத தாதி, தத்தீனு ததிமி, தா கத தாதி,
         தக தீனுததிமி, தா கத தாதி, தத்னாங்குடு, தித்னாங்குடு
         தத்தளாங்குடுதோம், தித்தளாங்குடுதோம்,
         தாங்குடு, தாங்குடு, தாஹா, தீங்குடு, தீங்குடு, தீஹீ
         தாங்குடு, தாங்குடு, தீங்குடு, தீங்குடு,
         தகததிங்கிணதோம்                               (குறத்தி)

அனுபல்லவி

         பொறுத்த புகழ்த்தஞ்சை புரத்தின் வளர்சர
         போஜி நரபதி மேவு மெழில்கண்டு
         திறத்தின் மிகுமயல் பரித்த சிலைநுதல்
         கறுத்த கயல்விழிச் சிறுத்த கொடியிடை               (குறத்தி)