பக்கம் எண் :

31

சரணங்கள்


         தங்கக் குடமன கொங்கைத் துணைகளிற்
         சந்தக் களப மிலங்கவே
         சங்கக் குலவளை செங்கைப் புதுமலர்
         தங்கிக் கலினென் றலங்கவே
         சிங்கத் துவளிடை பொங்குற் றிடுமெழில்
         சிந்தித் தெவரு மயங்கவே
         கங்குற் கணுமொளிர் கஞ்சப் பதநடைக்
         கஞ்சப் பெடைக ளுயங்கவே                       (குறத்தி)

         கன்ன மதிலணி பொன்னி ளுறுகுழை
         மின்னு மொளிவுற மின்னவே
         வன்ன நறுமலர் நண்ணு குழலெழில்
         மன்னு மதனடி பின்னவே
         பன்னு குழன்மிசை யண்ணலளிகுலம்
         முன்னு மிசையெதிர் துன்னவே
         அன்ன ளடிபுனை சொன்ன பரிபுரம்
         இன்னள் பதுமினி யென்னவே                      (குறத்தி)

         மாசு தவிர்பிறை யாசை கொளுநுதல்
         ஈசர் மிகிழ்பொடி பூசியே
         பாச விளைஞர்க டாச ரெனவுற
         மோச விழிவலை வீசியே
         கோசு களினியல் வாச முனகுறி
         நேச முடனேவி லாசியே
         தேசி னுயர்சர போசி யெனுமக
         ராச னுறுபுகழ் பேசியே                            (குறத்தி)
                           ___