மோகினி குறத்தியை பாங்கியின் மூலம் அழைக்க
குறத்தி பிரவேசம்
___
குறத்தி பாட்டு
ராகம்-கௌளிபந்து] பல்லவி [தாளம்-மிஸ்ரம்
குறவஞ்சி வந்தாள் மோகனக்
குறவஞ்சி வந்தாள்
அனுபல்லவி
திறமுந் திருவும் நெறியு முறைதஞ்சை
செழுநகர்ச் சரபோஜி மகராஜ னருள்பெற்ற (குறவஞ்சி)
உடன் குறத்தி வசனம்
குறத்தி வசனம்:- கூரமுறங்கற்ற, கூரமுறமி்ல்லையாங்கற்ற, முற
மில்லையாங்கற்ற, கூறமுரமில்லையாங்கற்ற
சரணங்கள்
தரணியி லெங்கணு மதமொடு சென்று
தண்மலர்க் கணைகொண் டெவரையும் வென்று
வருமத னனேயடா வாய்த்ததோ வின்று
வாவெதி ரொருகை பார்ப்போமிங் கென்று (குறவஞ்சி)
கூடைகட்டலை முறங் கட்டலையோ வென்னக்
குயில்கூவு தல்போலக் கூவிக்கொண் டன்னப்
பேடென்ன நடந்தெழின் மயிலென மின்னப்
பெருமய லுடன்மகிழந் தாடவர் துன்னக் (குறவஞ்சி)
பச்சை குத்தலையோ வடியம்மே பிச்சை
பகர்குறி கேளுங்கள் சொல்கிறேன் விச்சை
இச்சகத் தனைவருங் கேட்பவ ரிச்சை
எனச்சர பேந்திரன் றனைப்போற்றி மெச்சி (குறவஞ்சி)
|