சகிகளில் ஒருத்தி குறத்தி வாசல்வளம் கூறப்
போவரை எடுத்துரைத்தல்.
___
சகி விருத்தம்
எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
நண்ணுபுகழ்ச் சரபோஜி மன்னன் றஞ்சை
நகருறையு மதனவல்லி மானே யந்த
வண்ணமலைக் குறத்திதனை யழைத்தி டென்றாள்
வந்துரைத்தாள் சென்றழைத்தாள் வந்து நின்று
விண்ணிடைச்சென் றுடுக்ணத்தைத் துகிற்பதாகை
மேதினிமி லுதிர்க்குமுயர் மனையை நோக்கி
ஒண்ணுதற்சிற் றிடைத்தொடிக்கை யனைய வஞ்சை
உளங்களித்து மணிவாசல் வளஞ்சொல் வாளே
___
குறத்தி வாசல் வளம் கூறுதல்.
___
ராகம்-பாசு] கண்ணிகள் [தாளம்-திச்ரம்
வாசலிது வாசலிது மகராஜன் வாசலிது
தீர்மானம்
தோதிந்த, தக்க, தோதிந்த, தத்தோம், தத்தோம், தொங்கா,
தகதோம், தொங்கா, தத்தோங்கா, தகதோங்கா,
தளாங்குதோம், ததிங்கிணதோம் (வாசலிது)
பாட்டு
தேசுறுபோ சலகுலத்தைச் செழிக்கவைக்கும் வாசலிது
(வாசலிது)
நன்னயஞ்சேர் தஞ்சைதனி னலம்பெருகும் வாசலிது
மன்னுசர போஜிமன்னர் மகிழ்ந்திருக்கும் வாசலிது (வாச)
|