திருமகளு நாமகளுஞ் சிறந்திருக்கும் வாசலிது
வரமுதவும் பெரியோர்கள் வாழ்ந்திசைக்கும் வாசலிது
(வாசலிது)
விதிதரும்வே தாகமங்கள் விளங்குமணி வாசலிது
சதுரங்க சேனைகளுஞ் சந்ததஞ்சூழ் வாசலிது (வாசலிது)
நேசமுறு சேனைகட்கு நிதியளிக்கும் வாசலிது
பூசுரர்க்கும் புலவோர்க்கும் பொன்சொரியும் வாசலிது
இத்தரணி மன்னரெல்லா மிறைஞ்சிநிற்கும் வாசலிது
மொய்த்திடுசீர் மும்முரசு முழங்குமணி வாசலிது
(வாசலிது)
மோகினி வசனம்:- ஏ! குறவஞ்சி! எங்கள் ராஜ்யத்தின் சிறப்பும் நீதி தவறாமல் அரசு செலுத்தும் எங்களது மகாராஜா ஸ்ரீ சரபேந்திர பூபதியின்
மோகினி பாட்டு,
___
ராகம்-ஸஹானா] பல்லவி. [தாளம்-மிச்சரம்
வாசல் வளமிங்கே நேசமுடனே சொல்லும்
மடந்தையே நீயாரடி
நேசமுடனே சொல்லும் மடந்தையே நீயாரடி
அனுபல்லவி
தேசமெங் கும்புகழ் வீசு மெழிற்றஞ்சை
வாசன்சர போசிமக ராச னுயர்மனை (வாசல்)
சரணங்கள்.
வானுல கத்துறு மேனகை யோவென்று
வையகத் தோரென்ன மறுகுதொறுஞ் சென்று
மானினி யார்கைக் குறிகள் சொல்லியின்று
வடிவமுற்றிடு மடமைமென்மயி லெனமுன் வந்துபின்
இனிதுகந்திட (வாசல்)
|