கனத்திடு குறக்கூடை யெடுக்குமின் னிடையும்
கைவீச் சுடனன்ன மன்னமென் னடையும்
சினத்திடும் வேள்கணை யனவிழிக் கடையும்
திருகவாடவர் மனது நாடொறும்
உருகமாமயல் பெருகவந்தெழில் (வாசல்)
மருவிநின் பேரொடு வளர்தேசப் பேரும்
மலைவளத் துடனுங்க ளொருசாதிச் சீரும்
திருவுநீ யறிந்திடு நதிகளு மூரும்
திரமு நீபெறு வரமுமேலத
னுரமு நானெதி ரறிய வோதிடு (வாசல்)
மோகினி வசனம்:- நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள். நீ எங்கிருந்து வருகிறாய். உன் ஜாதி வளமென்ன தெரிவி கேள்ப்போம்.
குறத்தி வசனம்:- அம்மா! சொல்லுறேன் கேளுங்கோ.
___
குறத்தி பாட்டு.
___
ராகம் - சௌராஷ்டிரம்] [தாளம் - மிச்ரம்
பல்லவி
எங்கள் குறச்சாதிவள மெடுத்துரைப்பே னம்மே
அனுபல்லவி
மங்களஞ்சேர் தஞ்சைநகர்ச் சரபநர பாலன்
மகிழ்ச்சியுட னாளுமிந்தப் புவிக்குளுயர் மின்னே (எங்கள்)
சரணங்கள்
மானினொடு பன்றிமரை யொளிவிருந்து கொல்வோம்
வந்தெதிர்த்தோர் தங்களைமேன் மிஞ்சவிடோம் வெல்வோம்
கானகத்திற் கிழங்கானை மருப்பதனாற் கொல்வோம்
கைக்குறிகண் மெய்க்குறிக ளெக்குறியுஞ் சொல்வோம் (எங்)
|