வரவுமொரு முயலைவிட்டு மதகளிற்றைப் பிடிப்போம்
மணலதனைத் தகவறுத்து வருதைலம் வடிப்போம்
மேவுமவ லிடிப்பதுபோ லுரலதனை யிடிப்போம்
மேன்மைதனக் கிழிவுவரின் மிகவதற்குத் துடிப்போம் (எங்)
செந்திருமா லென்றனக்கு மைத்துனன்கா ணம்மே
திங்களணி சிவனெனக்குத் தமையன்முறை யம்மே
அந்தமிகுங் கந்தனெங்கண் மருமகன்கா ணம்மே
அன்னநடை வள்ளியெங்கள் கன்னிகைகா ணம்மே (எங்)
மாமனைமுன் கைப்பிடிப்போங் கொழுந்தனோடு படுப்போம்
வாழுமெங்கள் சாதிமெத்த மானமுள்ள சாதி
நாமமுறு மாமிதனைத் தாயெனவே மதிப்போம்
நாத்தியெனுஞ் சொல்லுரையோம் போற்றிடுவோம் நீதி (எங்)
தீர்மானம்
தினத்தேந்திந, தினத்தேந்திந, தினத்தேந்திந,
தினனா, தின்னானே (ச் சே யம் மே)
தினத்தேந்திந, தினத்தேந்திந, தினத்தேந்திந, தினனா
பாட்டு.
கொச்சிமலை கொரகுமலை யெங்கோ மலைநாரு
பச்சேமலை பவயமலை யெங்கோ மலைநாரு
ஆனேமலை பொன்னுமலை யெங்கோ மலைநாரு
சீராரங்க மலைநாரு யெங்கோ மலைநாரு
கமுகுப்பிலா மாமரங்கோ யெங்கோ மலைநாரு
கதலிதெங்கு கனிமரங்கோ யெங்கோ மலைநாரு
ஆனேகுத்தி விருந்திடுவோ மணிக்குறவர் நாங்கோ
பூனேகுத்தி விருன்றிடுவோம் பூனிக்குறவர் நாங்கோ
ஒற்றேகுற்றி விருன்றிடுவோம் வொற்றைக்குறவர் நாங்கோ
பண்டிகுத்தி விருன்றிடுவோம் பன்றிக்குறவர் நாங்கோ
|