பக்கம் எண் :

37


  குறத்தி வசனம்:- ச்சேயம்மே-குறிசொல்
     வோம் அம்மே நாங்கோ அருண்ட காருக்குற்

     றக்கை போருவோம் அராடே காருக்குக்
     குன்றா தற்றக்கை போருவோம் அம்மே நாங்கோ
     பச்சரெப் பொற்றுக் குற்றுவமம்மே நாங்கோ
     சுக்குருணி சாமிக்குப் பொண்குருற்ற சாரியம்மே நாங்கோ
     சாரைப்பாம் படிச்சியி்ங்கிற சாரியம்மே நாங்கோ
     யெங்கசாரி மெற்ற மானமுள்ள சாரியம்மே நாங்கோ
     கைக்குறி மெய்க்குறி சொல்லுவோமம்மே நாங்கோ
     பூனைகுற்றி விருன்றாக்கிற்றிங்கிற சாரியம்மே நாங்கோ
     ஒற்றேகுற்றி விருன் றாக்கிற்றிங்கிற சாரியம்மே நாங்கோ
     பன்றிகுற்றி விருன் றாக்கிற்றிங்கிற சாரியம்மே நாங்கோ
     அணிக்கரி ஆமைக்கரி பூனைக்கரி கோபானன்று
     திங்கிற சாரியமே நாங்கோ
     மான்மரை யொலுவிருந்து கொல்வோம்மே நாங்கோ
     அண்ணனுன்ற குச்சியில் தம்பி யுருவா ரென்று கூறுவோ மம்மே
                                                       நாங்கோ
     குறத்தி பிள்ளைப்பெற குறவன் காயங் குறிக்கிற சாரியம்மே நாங்கோ
     ச்சேயம்மே வுன்முகத்தில் நல்ல கலையிருக்குரம்மே
     ச்சேயம்மே வுன்கையில் நல்ல ரேகையிருக்குரம்மே
     ச்சேயம்மே வுன்காலில் நல்ல சரிக்கிரமிருக்குரம்மே

___

அம்மே இதுவரை சாதிவளம் சொன்னே இனி
மலேவளம் சொல்றே கேளு.
குறத்தி பாட்டு.

___

 ராகம்-பைரவி]             பல்லவி.             [தாளம்-ஆதி

    

     மலைவளஞ் சொல்வேன்கே ளம்மே நானறிந்த
     மலைவளஞ் சொல்வேன்கே ளம்மே