|
அனுபல்லவி.
சிலைவளங்கொள் சரபோஜி மன்னர்தென் றஞ்சைத்
திருநகர் தனில்வாழு மருமலர்க் கோதாய் (மலைவளம்)
சரணங்கள்
மல்லிகார்ச் சுனமெனவோர் விண்டு
மனத்தொன் றதிலெண்ணிக் கொண்டு
மகிழ்ந்தேறி விழுந்தவர்கள் பண்டு
மதித்ததெல் லாமடைவர் கண்டு (மலைவளம்)
சொல்லுமதைப் புகழுமிந்த ஞாலம்
தொகு பணிக்கு மயில்களினீள் சாலம்
தோகைநிழ லுதவியனு கூலம்
தோற்றிடவே யாற்றும் பகற்காலம் (மலைவளம்)
கனமாம் பொதியமலைச் சித்தர்
கருத்தினில் வெகுபரி சுத்தர்
கறைக்கண்டர் தமக்கவர் பத்தர்
காலங்கள் பலகண்ட நித்தர் (மலைவளம்)
தினமுஞ் சிவாகமம் படிப்பார்
சித்தார்ந்த மேபெரிதாய் முடிப்பார்
செறிந்திடைம் புலன்களை யடிப்பார்
சிவபதம் நிலைபெறப் பிடிப்பார் (மலைவளம்)
இனுமதி லொருநெல்லி யடுக்கும்
எடுத்தருந் திடின் மூப்பைத்தடுக்கும்
எழிலுறு மிளமையைக் கொடுக்கும்
இமையவ ருணவினைக் கெடுக்கும் (மலைவளம்)
தனுவாய் வளைந்ததொரு வெற்பு
தழலா யெழுந்ததொரு வெற்பு
|