சலமாய் நிறைந்ததொரு வெற்பு
தனிக்குடை யானதொரு வெற்பு (மலைவளம்)
திருவுட னொருமலை வாழும்
தேறிரு கழுகதிற் சூழும்
தெரிசிக்கி னதைப்பிறப் பேழும்
சேர்ந்துமேற் றொடராம லாழும் (மலைவளம்)
தாரணியிற் பலவுள நாகம்
தகுமதி சயங்கள நேகம்
தந்நிகர் சரபோஜி மன்னர்
தஞ்சைக் கணிதரும் வஞ்சி (மலைவளம்)
___
மோகினி விருத்தம்.
___
எண்சீர்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
நிலவுமதி புனைவேனிப் பிரகதீசர்
நிகழ்கருணை யேற்றினிய வரங்கள் பெற்றே
உலகுபுரந் தருள்சரப நிருபர் தஞ்சை
உயர்நகரி லனம்போல நடந்துவந்து
திலகநுதன் மயில்போல நின்று நீடு
சிறந்தபசுங் கிளி போலப் பேசு மின்னே
குலவுமிந்த மலைகளுக்கு ளுனது சொந்தக்
குடிசையெந்த மலையிலதைக் கூறுவாயே
___
குறத்தி தன் சொந்த மலையைப்பற்றிக் கூறுகிறாள்.
___
ராகம்-ஆனந்தபைரவி] பல்லவி. [தாளம்-திச்ரம்
குடிசைவைத்து வாழுமலை கூறுவன்பூங்கொடியே
கோகிலமே யனப்பெடையே குலவு மிளம்பிடியே
|