சரணங்கள்
தங்கமகா மேருவினிற் றன்குடிசை தொடுத்தோம்
சாபமலை யென்றுரைத்தார் தாபமொடு விடுத்தோம்
சங்கரனார் கைலைமலை தனிலுறையச் சென்றோம்
தவப்பூத கணங்கள் கண்டோஞ் சிவப்பிரீதியென்றோம் (குடி)
திங்களணி காளத்தி கண்டதனை நயந்தோம்
திண்ணன்கண்ணைப் பறித்ததுமுன் னின்னதென்றார் பயந்தோம்
அங்குலவு குற்றால மலையினுறப் போனோம்
அருவியின்மூழ் கிடுவிரென்றார் நழுவிவர லானோம் (குடிசை)
ஏறிவட வேங்கடத்தி லிருக்கவிடம் பார்த்தோம்
இன்னதுமால் கொண்டமலை யென்றுரைத்தார் தீர்த்தோம்
ர்றிலுயர் பழனிமலை யினிதெனவே குறித்தோம்
இடும்பன்மலை யெனப்புகன்றார் திடங்கொளதை வெறுத்தோம் (குடிசை)
தூறுமுகில் சூழுமொரு தூயமலை தொட்டம்
தூங்கன்மலை யீங்கிதென்றா ராங்கதனை விட்டோம்
கூறுபுகழச் சேரலன்றன் குவடணைந்தோ மப்பால்
கொல்லியிது வென்றுரைத்தார் தள்ளிவந்தோ மிப்பால் (குடிசை)
விராலிமலை சோலைமலை ஸ்வாமிமலை யம்மே
விளங்குமெங்கள் குலவள்ளிக் குகந்தளித்தோ மம்மே
பிரான்மலையுஞ் சிராமலையும் பிறமலையு மம்மே
பிறைமுடிமேல் வைத்திருக்கும் பிரான்மலைக ளம்மே (குடி)
தராதலம்போற் றிடமேவுந் தஞ்சையிலெந் நாளும்
தங்குசர போஜிமன்னர் சிந்தைமகிழ்ந் தாலும்
புராதனமா மலையாகிப் புகழ்தவத்தோர் முந்தப்
பொருந்திவளர் நேரியெங்கள் சிறந்தமலை யம்மே (குடிசை)
|