நேரிமலை மேற்குடிசை நிலைக்கவைத்தோ மம்மே
நீடுமது வெங்கள்குடி தழைக்கவைத்த தம்மே
தாரகைகள் போலமுத்தந் தயங்குமதி லம்மே
சந்தமுறு நேரியெங்கள் சொந்தமலை யம்மே (குடிசை)
குறத்தி வசனம்:- அம்மே இன்ன நா போன தலங்களை பத்தி சொல்றே கேளம்மே
___
குறத்தி தலமகிமை கூறுதல்.
___
ராகம் - அசாவேரி] பல்லவி. [தாளம் - ஆதி
தாரணியி னானறிந்த தலங்களைக்கே ளம்மே நானறிந்த
தலங்களைக்கே ளம்மே.
அனுபல்லவி.
சீருறுதென் றஞ்சைநகர்ச் சரபோஜி மன்னர்
செழிக்கவருள் சரபேசன் றிரிபுவன மறிவேன்
(தாரணி)
சரணங்கள்.
தேசுதருந் தழன் மலையாய்ச் சிவன்விளங்க மாலும்
திசைமுகனும் பாதமுடி தேடருணை யுடனே
நேசமுட னிமயவல்லி நீடுமொரு மாவின்
நிழலிருந்து தவம்புரியே காம்பரநா னறிவேன் (தாரணி)
குலவுமிரா வணன் கரத்தா லெடுத்தசிவலிங்கம்
கோவினது செவியுருவாங் கோகரணத் துடனே
இலகலுறு வரணையசியிரு நதியின் பேரால்
இசைவார ணாசியெனு மெழிற்காசி யறிவேன் (தாரணி)
கனத்தமறக் குலத்தர்சங் கரன்விழியிற்றமது
கண்ணையொடுத் தணிந்ததிருக் காளத்தி யுடனே
|