பக்கம் எண் :

42


     சினத்தின்மிகு திரிபுரத்தைக் கணப்பொழுதி லீசன்
     சிறுநகைசெய் தெரித்திருக்குந் திருவதிகை யறிவேன்         (தாரணி)

     பதஞ்சலியு முயர்புலிக்காற் பண்ணவனுங் காணப்
     பரமசிவ னடம்புரியுஞ் சிதம்பரத் துடனே
     கதங்கொடு சூழ் கடலுலகைக் கட்டழிக்கும் போதோர்
     கப்பல்வடி வாய்மிதந்த காழிநக ரறிவேன்                  (தாரணி)

     ஒருகோவி லிடைமூன்று குளமிருக்கு மந்த
     ஊரறிவேன் பேரறிவே னோதமத னுடனே
     கருதுமொரு மறையவனைத் தொடர்காலன் றன்னைக்
     கண்ணுதல்கால் கொண்டுதைத்த திருக்கடவூரறிவேன்            (தா)

     உமைமயிலாய்ப் பூசித்த வொருதலத்தி னுடனே
     ஓங்கிடுமோ ரரசுசிவன் கோயிலுறை தலமும்
     கமலைதவஞ் செய்தலமு மிடைமருதுங் குடந்தைக்
     கடிநகரு மேரண்ட நகரமுநா னறிவேன்                   (தாரணி)

     ஐயாறுஞ் சிரகிரியுந் திருவாங்க நகரும்
     ஆனைக்கா வுடன்மதுரைப் பெரும்பதியு மிராமன்
     மெய்யான பத்தியொடு சிவனையருச் சித்து
     வேண்டுவரம் பெற்றவிரா மேசுரமு மறிவேன்               (தாரணி)

  குறத்தி வசனம்:- அம்மே நான் குளிச்சநதி வளமெலா சொல்றே கேளு
    

___

குறத்தி நதிவளம் கூறுதல்.
___

 ராகம்-மோகனம்]            பல்லவி.            [தாளம்-திச்ரம்
    

     நானறிந்த நதிகளெல்லாம் நயந்துரைப்பேனம்மே
     நதிகளெல்லாம் நயந்துரைப்பே னம்மே