பக்கம் எண் :

44

சரணங்கள்.


         வங்கதேச மோடரபி குச்சரம்
             மாக தம்புகழ்வி தேகமே
         துங்க முற்றிடு கொங்க ணந்திகழ்
             துளுவ தேசமெனுந் தேகமே
         சிங்க ளங்கவு டங்க லிங்கநற்
             றெலுங்கம் நீடுவி வேகமே
         இங்கி தந்தரு சோழ தேசமுன்
             இலங்கு தேசம நேகமே                          (தேச)

         அங்க தேசமதி லாறு கோட்டையுண்
             டவற்று ளொன்றுறு வட்டமே
         தங்கு மன்னதிற் காவ லைங்கரன்
             சதுர மேலொன்று திட்டமே
         பொங்கு மன்னது காவல் செய்வது
             புகலு நான்முகற் கிட்டமே
         மங்க ளங்கொண்மே லொன்று வெண்பிறை
             வடிவ மாலதிற் பட்டமே                         (தேச)

         மீதுகோணமோர் மூன்றி லொன்றதின்
             மேலு ருத்திர னீடுமே
         ஓது மேலிரு மூன்று கோணத்தோன்
             றோங்கு மீசுரன் கூடுமே
         ஏதமில்லதின் மூன்று வட்டமொன்
             றிறைச தாசிவ ணாடுமே
         போது மின்னவை மூல மாதிய
             பொருந்து நாமங்கள் சூடுமே                      (தேச)

     குறத்தி வசனம்:- அம்மே! இந்த சோழநாட்டின் மகிமையை சொல்றே
 கேளு

___