70 |
கூண்டினி தொழுகுங்
குறையின் மறுகுதொறுங்
கூடம் போன்ற கோபுர நிரையொடு
மாடஞ் சான்ற மதுரைமா நகர்க்கண்
முந்திய சங்க மூன்றொன் றாகிப்
பிந்திய சங்கம் பிறந்த தாலெனத் |
75 |
தண்டமிழ் விரிக்கும்
பண்டைநூ லெழும்ப
வியனனி விழைகுநர் குழீஇனர் பயில
மால்செய் கல்வியர் மாண்பி னூல்செய
வுரைகாண் வல்லுநர் வரைகாண் டெழுத
முறைபிறழ்ந் துற்ற குறைபல் காண்மார் |
80 |
முதுநூ றேண்டிப்
பழுதாய்த் தமைக்கக்
குற்றம் போகிய கற்றன கெடாஅப்
பேணூஉ வைகுமோர்ப் பரிக்கை காணூஉச்
சிறப்புப் பெயரொடு பரிசிலு மளிப்பப்
பின்னும் வேண்டுவ வென்னவும் புரிய |
85
|
மங்கலி லருந்தமிழ்ச்
சங்கமொன் றிரீஇனன்
குமரிமருங் குற்ற நிமிர்திரை முரியுஞ்
சேது காவலர் திறற்குடிப் பிறந்தோன்
றீதுதீர் வாழ்க்கைத் தென்புலங் காப்போன்
மறங்காண் பகைவர் வணங்கிய புறங்காண் |
90 |
மஞ்சுவரு மேற்றி
னஞ்சுவரு திறலினன்
புலவர் வம்மின் பொருநர் வம்மின்
பலர்புகழ் கூத்தரும் பாணரும் வம்மின்
போராக் கதவதிப் புரவலன் வாயிலென
வேரார் வான்கொடி நுடங்குபு நுடங்கி |
95
|
யகவையம் மாடத்து
முகவை யூரன்
மேலறி வுயர்ந்த நூலறி புலவன்
முத்தம் விளைவயற் பாலவ னத்த
நாடுசெகிற் கொண்டு பீடுகெழு குடிதழீஇ
முற்றக் காக்குங் கொற்றக் குடையினன் |
100
|
விரைகமழ் கண்ணியன்
பாண்டித் துரையெனக்
கேட்டனெ னன்றே கெட்டதென் கவற்சி
வேட்டன வடைதல் விளிவுறா தாலெனக்
கதுமென வெழுஉச் சினைகொள் புதுமலர்
வண்டுந் தேனு முண்டன களிப்ப |
105 |
நறவிருந் தளிக்கும்
புறவுறழ் சோலை
வளனற வறியா மல்லலம் முதுநகர்
மாண்புறப் புகூஉக் காண்பன கண்டு
செந்தமிழ் விளங்குமச் சங்கம் போஓய்
நல்லிசைப் புலவர் சொல்லிசை பரப்பக் |