பக்கம் எண் :

14 புலவராற்றுப்படை

110 கூண்டினி திருக்கு மவைக்களங் குறுகி
யாண்டியான் யாத்த கவியரங் கேற்றி
யுலகுசொல் சிறப்புப் பெயரொடு பெறாஅ
வரிசை யான்ற பரிசிலும் பெறூஉ
வந்தனென் யாஅரெனக் கண்டறிந் தவரே
115 நீயிருஞ் செல்லிய ராண்டுப் பலபெற
மேயினி ரெனினே யின்னே விட்டிவட்
காலிற் செல்லி னாளிற் செல்லு
முருமுறுமோ டுறலொழியி
னிருபுறனு மிருப்புருளை
120 நான்குருளக் கான்குழுமும்
வாஅய்க்கொள்ளிப் பேஎயுயிர்ப்பி
னொலித்துமிழுங் கலித்தூமங்
குழல்வாயிற் சுழல்கொள்ள
மரவட்டைச் செலவொப்பச்
125 செல்பாண்டில் பல்கோத்த
நெடுந்தொடரி னிரைநீண்டு
கடுங்காலிற் கழிவிசையி
னெந்திர வூர்தி யிவர்ந்தனிர் படர்மி
னந்தமில் காட்சி யணிபல காண்பிர்
130 வீறிய மாக்க ளேறிறங் கிடன்றொறு
மூறிய வமிழ்தி னுண்டிபல் பெறுகுவிர்
பன்னா ணடந்தனிர் மன்னா தெய்க்குங்
காலுழப் பறியா மாலுறு செலவின்
மலைப்புறு நெடுவழி யொருநா டொலைச்சிச்
135 சூடிய நறுமலர் வாடிய லுறாமு
னிதிமலி கூடலம் பதிவயிற் புகுவி
ராவயிற் போந்து கூரயி லேந்திய
முடியுடை வழுதியர் முறைவழி யிருந்த
கொடிநுடங் கெயிலிற் கோயின் மறுகு
140 மாலய வீதியு மாவண வீதியு
மறிந்தவர் வியக்கு மாண்மையர் மலிந்து
செறிந்தமர் தெருவுந் திருவொடுங் காண்பிர்
கண்டனிர் பின்றைத் திண்டிறற் புலவர்
கூடுறு சங்க நாடினிர் செலினே
145 யாயிரங் கதிர்கொள் பருதி ஞாயிறு
திருந்துவரைச் சிகர மீமிசை யிருந்தெனக்
கரும்பனைக் கையின் வேழத் தொருவெரி
நுவவு மதிவட்டத் தவவில்குடை நிழற்ற
வருமிறை யிவனெனப் பொருவறு விதியி