150
|
னரப்புவகை பிழையா
நான்குவகை பரப்பிய
யாழிற் பாண ரேழிற் பாட
விரண்டுபத் தடுக்கி யொன்றுகடை வைத்த
வண்மைய ரொருவடி வண்மின ரெடுத்தென
வான்கவி வாணர் நான்கிற் பாடப் |
155 |
பொன்முடி கவித்து
வென்வே லேந்திப்
பாண்டிநா டளிக்கும் பண்பி னாண்டகை
யிரவலர்க் கடையா வாயிற் புரவலன்
கோதுபதி யொடுக்கும் பாற்கர சேதுபதி
யருளொடு நிலைஇயர் பொருணனி யுதவ |
160 |
வன்னவன் பெயரொடு
மன்னுபெயர் கொண்டு
சங்க மேவுமோ ரங்க மாகி
யூணுடை யேனைய மாணவர்க் கார்த்தி
நல்லா சிரியர் பல்லோர் வைகினர்
தொன்னூ லொருசிறை யொருசிறைப் பின்னூ |
165
|
லோவிறந் துணர்த்துந்
தாவில் கொள்கை
யழகமர் காட்சிக் கழகமுங் காண்பி
ரிலக்கியத் தனவு மிலக்கணத் தனவு
மலக்கண் டீர்க்கு மாகமத் தனவுமென
முதியவு மான்ற முறைமையி னமைந்த |
170 |
புதியவு மாகிப்
பொலிந்துற்று நசைஇ
யோரு மாக்க ளுள்ளந் தேரும்
பாண்டியன் சுவடிச் சாலையுங் காண்பிர்
தென்மொழி யெழுத்தொடு வடமொழி யெழுத்து
மீங்குநனி பாய வாங்கிலாக் கரமுங் |
175
|
கால்கொள வாக்குபு
பால்வேறு படுத்தி
யொன்றுபல வாகிச் சென்றுறப் பதிக்கு
மச்சுச் சாலையு மெச்சக் காண்பிர்
கண்டனிர் சங்க மண்டபம் புகினே
தீந்தமிழ்ப் புணரி மாந்திய மக்களும் |
180
|
வடமொழி தேர்ந்து
திடமுறு பவரு
மாங்கிலம் பயின்ற பாங்கரு மாகிப்
புரையறு நூல்கட் குரைசெய் குநரு
நால்வகை பயக்கு நூல்செய் குநரு
மோரா முதுநூ லாராய் குநருமெனப் |
185
|
பெரும்புலவர்
மருங்கமர
மண்டுடுவில் வெண்டிங்களுந்
தரங்காட்டி யரங்கேறிய
பயில்சிறப்புப் பெயரெய்திய
வறப்பரிசி லுறக்கொள்ளிய |