புலவனையாற்றுப்படுத்துக்
கூறுமாற்றானே புலவராற்றுப் படையென
வாயிற்றென்றாலோவெனின்; - புறப்பொருள் வெண்பாமாலைப் பாடாண்
படலத்து பாடாண்பாட்டே என்னுஞ் சூத்திரத்தில் அமரர்கண் முடியு
மறுவகை யாகிய, கொடி நிலை கந்தழி வள்ளி குணஞ்சால், புலவரை
யவர்வயிற் புகழ்ந்தாற்றுப் படுத்தல், புகழ்ந்தனர் பரவல் பழிச்சினர் பணித,
னிகழ்ந்த காமப் பகுதியுட் டோன்றிய, கைக்கிளை வகையும் என்புழிப்
புலவரையவர் வயிற்புகழ்ந்தாற்றுப்படுத்தல் என்பதற்கு அருங்களவானத்
தமரர்வயிற் பெரும்புலவனை யாற்றுப்படுத்தன்று என்பதாற்,
கந்தழிவேண்டினானொரு புலவனை அமரரிடத்து ஆற்றுப்படுத்தலே
புலவராற்றுப்படையாமாகலின், அது பொருந்தாதென்க. அல்லதூஉம் அது
அமரர்கண் முடியு மறுவகை யானும் என்னுந் தொல்காப்பியப் புறத்தி
ணையியற்சூத்தி ரத்துப் போந்த பாடாண்டிணைக்கட் டெய்வப்
பகுதியுளடங்கியது. இது கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு,
மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீ
இச், சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும் என்னும் மக்கட்
பகுதியுளடங்கிய செந்துறைப் பாடாண்பாட்டெனக் கொள்க.
பரிதி
வெயில் எறிக்கும் விரிவு உறு வெளி கீழ் விள கனி நின்று
ஆங்கு நின்று - ஞாயிறு தன்வெயிலை யெறிக்கின்ற விரிந்த ஆகாயத்தின்
கண் விளம்பழமொன்று நின்றாற்போல நின்று,
இக்காட்சி
பகற்காலத்துக் காண்டலென்பது போதர வெயிலெறிக்கும்
வெளியென்றாம். கீழ்-ஏழாவது. நிழற்கீழ் என்றார் பிறரும்.
இவ்வாதாரமருவாயும், ஆதேயமுருவாயு நின்றன; ஆகாயத்திற் பருந்து
என்பதுபோல. நின்றாலென்னம் வினையெச்சம் நின்றென நின்றது. மேல்
வருவனவுமன்ன.
துளங்கிய-விளங்கின,
மணி
என மருள் நீர் உருள் நீர் உம்பர்-நீலமணியென்று
மருளுநீர்மையினையுடைய உருண்ட நீரின்மேலே,
உருணீர்-கடல்.
நீரினியற்கைவடிவம் உருட்சியாகலின், உருணீரென்றாம்.
அது படைப்புக்காலத்து ஆகாயத்தின் கண்ணுருண்டு நின்றதாகலின்.
மணல்
அடர்ந்து ஆடைஇல் படர்ந்தன்று-மணல்கணெருங்கிப்
பாலாடையொப்பப் படர்ந்தது இப்பூமி,
|