பக்கம் எண் :

18 புலவராற்றுப்படை

     படர்ந்தன்றென்னும் வினைமுற்றுப்பெயர் வினைமுதற் பொருட்டு.
இதனைக் கர்த்தாவான கிருதந்தமென்பர் வடநூலார்.

     ஆகலின்-ஆதலால்,

     கரும் கடற்று என்னும் இவ் இரும் கண் ஞாலத்து-கரிய
கடலினையுடையதென்னும் இந்தப் பெரிய விடத்தினை யுடைய
பூமியின்கணுள்ள,

     கடலானதுருண்டை யென்பதும், அதன்மேற் படர்ந்த மணற்கூட்டமே
பூமியென்பதும் எம்மோத்து.

     பரதகண்டம் பண்ணிய விரதம்-கண்டங்கள் பலவற்றள்ளும்
பரதகண்டம் நோற்ற நோன்பு,

     தனிமை என் பெயர்த்து ஆய் இனிமை என் பொருட்டு
ஆய்-ஒப்பின்மையென்னும் பெயரையுடையதாய் இனிமை என்னும்
பொருளையுடையதாய்,

     என்றது தமிழை. அது, தனிமையைக் குறிக்குந் தமியென்னும்
வினையடியாற் பிறந்து, வினைமுதற் பொருண்மையை யுணர்த்தும் விகுதி
குன்றி, இமிழ், உமிழ், கமழ் என்பனபோல ழகரப் பேறு பெற்றுத் தமிழென
நின்ற தென்பவாகலின், தனிமையென் பெயர்த்தா யென்றும், தமிழென்னும்
பெயர்க்குப் பொருள் இனிமையென்பவாகலின், இனிமையென்
பொருட்டாயென்று முரைத்தாம். “தமிழ் தழிய சாயலவர்” என்னுஞ்
சிந்தாமணிச் செய்யுளில் தமிழை இனிமையென்றார் நச்சினார்க்கினியரும்.

     உத்தரம் ஒரீஇ தக்கணம் போந்து என-வடதிசையை நீங்கித்
தென்றிசைக்கு வந்தாற்போல,

     கங்கை  சடையன்  மங்கை  ஒரு    பாகன்-கங்கையையுடைய
சடையை யுடையவனாகிய மங்கையை ஒரு பாகத்தேயுள்ளவன்,

     என்றது சிவனை. மங்கை-உமை. சடையனென்னுங் குறிப்பு முற்றுப்
பெயரெச்சமாய் நின்றது. ஒருபாக மங்கையனென்றது பொருத்தமில் புணர்ச்சி.
“உயிர்கொடிச் சேவலோயே” என்றார் பிறரும். இதனை விகுதி பிரித்துக்
கூட்டுதலென்பர் பிரயோக விவேக நூலார்.

     சிமயம் பொதியத்து அமர் முனி அகத்தியற்கு ஆய்ந்து தர உணர்த்தி
போக்க-உச்சியையுடைய பொதியமலைக் கண்ணமர்ந்த