முனிவனாகிய அகத்தியனுக்கு
அதையவனாராய்ந்து உலகத்திற்குத் தரும்படி
போதித்துப்போக,
வடமொழியைப்
பாணிநிக்கு வகுத்துரைத்துத் தென்மொழியைக்
குடமுனிக்கு வற்புறுத்தார் கொல்லேற்றுப்பாகர் என்பவா கலி னிங்ஙன
முரைத்தாம். சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு மியற்பெயர்க் கிளவி
முற்படக் கிளவார் ஆகலின் முனியகத்திய னென்றாம். இதனை விசேடிய
பூர்வபத கருமதாரயனென்பர் பிரயோக விவேக நூலார். கடிசொல்லில்லை
என்பதனான், அகத்திய முனியென விசேடியோத்தர பதமாக்கிக்
கூறினு மமையும்.
போந்த-வந்த,
ஓர்ந்து
உணர் மாந்தர் களிக்கும் ஈர் தமிழ் முழுது உணர்சிறப்புஇன்
பழுதுதீர் புலவ-ஆராய்ந்தறியும் மனிதர்களைக் களிப்பிக்குந் தண்ணிய தமிழ்
முழுவதையு முணர்ந்த சிறப்பினையுடைய குற்றமற்ற புலவனே !
களிப்பிக்குமெனற்பாலது
களிக்குமென நின்றது. இதனை
அந்தர்ப்பாவிதணிச்சென்பர் வடநூலார்.
நின்
உள்ளம் குன்று தகவு இரிய ஒன்று கிளக்குவல் கேளாய்
அத்தை-நினதுள்ளங் குன்றுந் தன்மைகெட வொன்று சொல்லுகிறேன் நீ
கேட்பாயாக;
அத்தை-முன்னிலையசை,
வாளா
மன்னிய ஒரு நீ அன்ன யானும்-வீணே நிலைபெற்ற
ஒருவனாகிய நின்னைப்போல நானும்.
நின்னையன்னவென
நிற்றற்பாலது நீயன்னவென நின்றது. இதனைவ்
திரிந்ததன்றிரிபென்பர். பாங்கனை யானன்னபண்பனை என்னுந் திருக்
கோவையாரில் யானன்னவென்பதற்கு என்னையொத்தவெனப் பொருள்
கூறினார் நச்சினார்க்கினியரும்.
பொருந்து
உறு புகழ் இன் அரும் தமிழ் நசைஇ-மிகப் பொருந்தின
புகழினையுடைய அரிய தமிழை நச்சி,
பொருந்தலு
முறுதலு மொருபொருளனவாகலின், ஒன்று மிகுதி
குறித்துநின்றது.
|