சங்ககாலத்து
ஆற்றுப்படை நூல்களில் இல்லாத பல கருத்துக்கள்
புலவராற்றுப் படையில் ஆளப்பட்டுள்ளன.
அவற்றுள் ஒன்று இப்
புலவராற்றுப் படையின் ஒப்புயர்வற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.
பழங்காலத்தில் ஆற்றுப்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் கால்நடையாகவே
சென்றனர். ஆனால் குலாம் காதிறு நாவலர் வாழ்ந்த
பொழுது
ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குப் போகக் கால்நடையாகச் செல்ல
வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. பலவகையான ஊர்திகளில் ஏறி அங்கும்
இங்கும் சென்றனர். எனவே குலாம் காதிறு நாவலர் மற்றப் புலவரை
ஆற்றுப்படுத்தும் பொழுது இத்தகைய ஓர் ஊர்தியில்
செல்லுமாறு
பணிக்கிறார். குலாம் காதிறு நாவலர் அத்தகைய எந்திர ஊர்தியைப்
பின்வருமாறு வர்ணிக்கிறார் :
உரு
முறுமோ டுறழொலியி
னிரு புறனு மிருப்புருளை
நான் குருளக் கான்குழுமும்
வாஅய்க்கொள்ளிப் பேஎயுயிர்ப்பி
னொலித்துமிழுங் கலித்தூமங்
குழல்வாயிற் சுழல் கொள்ள
மரவட்டைச் செலவொப்பச்
செல்பாண்டில் பல்கோத்த
நெடுத் தொடரி னிரை நீண்டு
கடுங் காலிற் கழிவிசையி
னெந்திர வூர்தி.
இது நாம் எப்பொழுதும்
காணும் எந்திரவூர்தியாகும். இடியின்
முழக்கத்தோடு மாறுபடுகின்ற ஓசையை உடையது. இ்வ் வோசையை
உண்டாக்குவது இரும்பு உருளைகள். அவ்வுருளைகள் நான்கு நான்காக
இரண்டு பக்கத்தும் அமைந்திருக்கின்றன. அவை உருள எங்திரவூர்தி
இயங்ககின்றது. அவ் வெந்திரவூர்தி ஒலிக்கும் பொழுது அது கொள்ளிவாய்ப்
பேய்களின் மூச்சை யொத்திருக்கின்றது. இவ்வாறு ஒலிக்கும்பொழுது எந்திரம்
மிக்க புகையைக் கக்குகின்றது. இப்புகை குழலின் வாயில் சுழன்று கொண்டு
இருக்கும். எந்திரவூர்தியின் நடையோ வென்றால் மரவட்டையின் நடையைப்
போன்றே இருக்கும். மரவட்டையின் நடையைப் போன்ற வண்டில்கள்
பலவற்றைச் சேர்ந்த நெடிய தொடரினை உடையது. நிரை யாயுடையது. மிக
நீண்டுள்ளது. மரவட்டையின் நடையையுடைய
வண்டில்கள்
சேர்க்கப்பட்டாலும் கடுமையாக வீசுகின்ற காற்றைப்போல ஓடுகின்ற
எந்திரவூர்தியாயிருக்கும். இவ்வடிகளில் புகைவண்டியே
வருணிக்கப்பட்டுள்ளது.
|