1 ஸ்ரீ ஸ்ரீராமஜெயம் இராம நாடகம் வழிபடு கடவுள் வணக்கம். விநாயகர் தோத்திரம் நேரிசை வெண்பா ஆனை முகனே அரனார் திருமகனே சேனையர்கோ னாகவலஞ் செய்வோனே - ஞானமே நாடகத்தைக் கொண்டஉன்றன் நல்லருளா லேராம நாடகத்தைச் சொல்லுவேன் நான். தரு சௌராஷ்டிர ராகம் ஆதிதாளம் பல்லவி விநாயக சரணம் - ஜெயஜெய விநாயக சரணம் (விநா) அனுபல்லவி அநாத ரட்சகனே - கெஜமுகனே ஐங்கரனே - சிவ சங்கரன்மகனே (விநா) சரணங்கள் 1. அன்பிலாத பேயேன் - என்னுடைய அறிவு விளங்கவே துணைவரு வாயே என்குலதெய்வம் நீயே - இந்த ராமநாடகத்துக்குக்கனுக்கிரகிப் பாயே (விநா) 2. வானவர்பணி வோனே - நல்ல வாக்குத்தந்து காத்தருள்சீ மானே நானுனதடி யேனே - ராம நாடகத்துக் கருள்புரிநீ தானே (விநா) 3. உண்மை ஞானம் தோணும் - உன்றன் உதவியாலே நல்ல புத்திகள் பூணும் |