பக்கம் எண் :

2

நன்மை எய்திடும்                    காணும் - ராம
     நாடகத்தைச் சொல்ல முன்னிற்க        வேணும் 

ஆக்கியோன் பெருமை

(கொச்சகக் கலிப்பா) 

     கம்பரா மாயணப் பாற்கடலை உண்டு
         நம்பவரும் ராமநா டகமாம்மா மழையை
         அம்புவியில் காழி அருணாசல மேகம்
         கும்பும் உயிர்ப்பயிர்க்குப் பெய்து வினைகொய்ததுவே 

ஸ்ரீ ராமஜெயம்

*இராமாயண ஓரடிக் கீர்த்தனை

விருத்தம் 

ஏர்கொண்ட நான்மறையின் பொருளை எல்லாம்
    இனியதமி ழாற்செய்து தொண்டர்க் கீந்த
    பார்கொண்ட குருகூர்வாழ் சடகோ பாழ்வார்
   பதமலரைப் பணிந்துதிருந் சென்னை மேவும்
   தார்கொண்ட புயாசலன்ஒப் பில்லா வீரன்
    சதுரன்அயன் தொழும்ராமச் சந்திர மாலின்
   சீர்கொண்ட திருவருளின் பெருமை தன்னைத்
    தேறுவேன் மனமகிழ்ந்து கூறு வேனே 

கீர்த்தனை

தோடி ராகம்                            ஆதிதாளம் 

     கோதண்ட தீ க்ஷா குருவே பக்தரிருத்ய
         கோகனகமலர் மருவே                (கோத்) 

தாதண்டு சோலை விண் கற்பகத்தின்                   மேலே
     தழைக்கும் சென்னைநகர் வாழ் ஸ்ரீவேங்கடேச           மாலே
--------------------------------------------------------------------
* இந்த ஓரடிக்கீர்த்தனை இராசசேகரன் என்னும் கவிஞரால் பாடப்பெற்று
முன்னுள்ள கடவுள்வணக்கத்தோடும், ஆசிரியன் பெருமையோடும்
முற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.