99

     நொந்த பேர்பொருளைக்    கொண்ட தோஷமும்
     நோன்புகளை நடுவில்       விண்ட தோஷமும்
     வந்தபேர் பசிக்க           உண்ட தோஷமும்
     மடிநழுவும் பெண்களைக்    கண்ட தோஷமும் - இந்த”
                                         (யுத்தகாண்டம்-தரு-87)

வழியெதுகைச் சிறப்பு:-

     “பட்டபாடு கேளாய் - பணைத்தோளாய் - பிடித்த வாளாய்
     குட்டிமனிதன் தன்னை கட்டியிழுக்கப் பின்னை
     பெட்டிப் பாம்புபோலே சுட்டி அண்ணனாலே”
                                      (ஆரண்யகாண்டம் - தரு-6)

     “எட்டுநாளையில் பாருமம்மா
     இராவணப் பேரும்இவன் ஊரும்
     ........................................................................
     முட்டர்கள் துட்டர்கள் கெட்டபலிட்டர்கள்
     இட்டிடு கட்டுகள் ஒட்டுகள் கெட்டபின்
     நெட்டுள பட்டின மட்டியரக்கியர்
     கட்டிய பொட்டுகள் தொட்டறு பட்டிடும் - எட்டு”
                                (சுந்தரகாண்டம் - தரு - 12)

     “நாயகன்சொல் மறந்தாய் - அண்ணாவென்று
     பேயனைப் போல் பறந்தாய்
     தாயரையும் துறந்தாய் - பழிபோட
     நீயிதற் கோபிறந்தாய்
     சேயின் முகம்பார்க்கும் தாயின்முகம் போலே
     காயும் புழுவுக்குச் சாயும் நிழல்போலே
     தீயும் பயிருக்குப் பேயும் மழைபோலே
     மாயன் கஜேந்திரனுக் காய்வந்ததுபோலே”
                                  (யுத்தகாண்டம் தரு-92)

முரண் தொடைச்சிறப்பு:-

     ஆனைகட்ட சங்கலி தானெடுத்துக் கொடுத்தாற்போல்
     ஏனெதிர்த்துக் கொண்டாரென்னை இவரைப் பொடிபொடியா
     இடியேனோ வரவொட்டாமல்
     அடியேனோ வந்தமன்னரைப்
     பிடியேனோ என்சொல் முடியேனோ         அயோத்-தரு