98 “ஆழநெடுந்திரை கங்கை ஆறுகடந்தாலு மென்ன தோழன் என்றுராமன் என்னைச் சொல்லியருளிய தொரு சொல்லேனோ சொன்னபடிக்கு நில்லேனோ நான்பிடித்தகை வில்லேனோ - இவரைக் கொல்லேனோ” (அயோத் - தரு - 15) “அந்தராமத் துரோகி இவன்பலம் குறியேனோ ஆத்திநார் கிழித்தாற்போல் கிழக்கநான் அறியேனோ புவியடங்கலும் கிட்டவே - மண்டோதரி புலம்பும் ஓசை முட்டவே - கண்டவர்கள் எவரும் செக்கலி கொட்டவே - கண்டவர்கள் முழுதும் பிடித்துப் பொட்டவே - கட்டி இறுக்குறேன் - தோள் ஒடிய முறுக்குறேன் - தலைபத்தும் அறுக்குறேன் - தேங்காய் போல நொறுக்குறேன்” (சுந்தரகாண்டம் தரு - 4) “கண்டேன் கண்டேன் - சீதையைக் - கண்டேன் ராகவா அண்டரும் காணாத இலங்கா புரத்திலே அரவிந்த வேதாவைத் தரவந்த மாதாவை - கண்டேன் காவி விழிகளில் உன்உரு ஒளி மின்ன கனிவாய் தனலே உன்திருநாமமே பன்ன ஆவித் துணையைப் பிரிந்தமட வன்ன மானாலும் நான் சொல்லுவ தென்ன பூவைத் திரிசடை நித்தம் நித்தம் சொன்ன புத்திவழியே தன்புத்தி நிலை மன்ன பாவியரக்கியர் காவல் சிறை துன்ன பஞ்சு படிந்த பழஞ்சித்திரம் என்ன - கண்டேன்” (சுந்தரகாண்டம் தரு - 26) இந்த சேதுவைக் கண்டால் - சனகன் பெண்ணே இகபர சித்தியாமே நிந்தை யானகள்ளைக் குடிப்பதும் - பசு மந்தை உரிஞ்சு கல்லை இடிப்பதும் - நடுச் சந்தி விருட்சங்களை ஒடிப்பதும் - பிறர் சொந்தப் பெண்களைக்கை பிடிப்பதும் (இந்த) |